stalin app 
செய்திகள்

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?மக்களே ஈஸியாக தெரிந்துகொள்ள வந்தாச்சு 'மக்களுடன் ஸ்டாலின்' ஆப்!

விஜி

மிழ்நாட்டில் உள்ள திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்து இனி பொதுமக்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளும் வகையில் மக்களுடன் ஸ்டாலின் ஆப் தொடங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலியை வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

திராவிடத்தின் முப்பெரும் தலைவர்களான பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கொள்கை வழித்தோன்றலான, நமது தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் "எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தாக வேண்டும் என்ற திராவிட கோட்பாட்டின் படி "மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17-ஆம் தேதி (நாளை) வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியான பள்ளிகொண்டா பகுதியில் காடனேரி பைபாஸ் சாலை அருகில் முப்பெரும் விழா மிக பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. அந்த விழாவில் "மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலியை முதலமைச்சர் வெளியிடுகின்றார்.

அனைவருக்கும் அனைத்தையும் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற பேரறிஞர் அண்ணாவின் குறிக்கோளின்படியும், மக்களுக்காகக் கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தையும் பொது மக்கள் இந்த செயலியின் மூலம் ஒரே சொடுக்கில் தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இச்செயலியில் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் பற்றியும், நமது முதலமைச்சரின் களச் செயல்பாடுகள் பற்றியும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT