செய்திகள்

பல் பிடுங்கிய விவகாரம் - சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு, திடீரென்று அதிரடி காட்ட ஆரம்பித்திருக்கும் தி.மு.க அரசு!

ஜெ. ராம்கி

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் எழுந்த உடன், ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங். பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சென்ற வாரம் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது வழக்கு, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒரு மாதம் கழித்து, தமிழக அரசு அதிரடி காட்டுவது பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

அம்பாசமுத்திரம் சம்பவம் பற்றிய செய்திகள் வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று சட்டமன்றத்திலேயே முதல்வர் அறிவித்தார். ஆனாலும், அவர் மீது வழக்கு பதிவு செய்வதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லையென்றும் அவர் மீது புகார் தருவதற்கு பலர் தயங்கியதும் காரணமாக சொல்லப்பட்டது.

பல் பிடுங்கிய விவகாரம் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. விசாரணை அதிகாரியாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமுதா நியமிக்கப்பட்டார். ஒரு மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் விசாரணை சுறுசுறுப்பாக நடைபெற்று வந்தது. தயக்கம் நீங்கி, மக்கள் புகார் அளிக்க முன் வந்த காரணத்தால் கூடுதல் தகவல்கள் கிடைத்தன.

இதைத் தொடர்ந்து ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுதத்தால் கொடுங்காயம் ஏற்படுத்துதல், சித்திரவதை செய்தால் உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அவருக்கு உதவி செய்த காவல்துறை ஊழியர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்பிடுங்கிய விவகாரம் பற்றி ஐ.ஏ.எஸ்.அதிகாரி அமுதா தலைமையிலான உயர்மட்டக் குழு நடத்ததிய விசாரணையின் அடிப்படையில் வழக்கை உடனடியாக விரைவாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. வழக்கை சி.பி.சி.ஐ.டி.போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என சிபாரிசு செய்தனர். இதன்காரணமாக வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார்.

சாத்தான்குளம் விவகாரத்தின் தந்தையும், மகனும் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஊரே கொந்தளித்தது. பல அதிரடி நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டியிருந்தது. அம்பாசமுத்தும் வழக்கில் ஏகப்பட்ட பேர் தங்களுடைய பற்களை இழந்திருக்கிறார்கள். ஆனாலும் விசாரணை குறித்து மக்கள் மத்தியிலோ, அரசின் நடவடிக்கையிலோ பெரிய அளவில் திருப்தி ஏற்படாத நிலையில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டது. நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்போம்!

கவனத்தை கவனத்தோடு கையாளுங்கள்!

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!

பேச்சுத் திணறல் காரணங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

SCROLL FOR NEXT