சு. வெங்கடேசன் எம்.பி., ரயில்வே அமைச்சர் சந்திப்பு:
“சென்னை - மதுரை இடையே செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்ல தெற்கு ரயில்வே பரிந்துரைத்த நிலையில், அதற்கு ரயில்வே போர்டு இன்னும் அனுமதி கொடுக்காமல் உள்ளது. அமைச்சர் தலையிட்டு அனுமதி வழங்க வேண்டும்” என்று நாடாளுமன்ற வளாகத்தில் சு. வெங்கடேசன் எம்.பி, ரயில்வே அமைச்சரை சந்தித்து பேசும்போது வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து “இனி தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்ல உடனே நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் உறுதியளித்தார்.
கோரிக்கைகள்:
இரயில் பவனில் டிஆர்இயு மற்றும் ஐசிஎஃப் யுனைட்டெட் வொர்க்கர்ஸ் யூனியன் தலைவர்களுடன் ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் சந்தித்து பேசியதாவது…
“தண்டவாள பணியின்போது ரயில் மோதி உயிர்பலி ஏற்படுவதை தடுக்க ரயில்வே டிராக் மேன்களுக்கு “இரட்சக்” என்ற பாதுகாப்பு கருவி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.
“ட்ராக்சன் சிக்னல், பிரிட்ஜ் தண்டவாளப்பிரிவு ஆர்ட்டிசான்கள் போன்ற தொழிலாளர்களும் பணியின்போது ரயில் மோதியோ, மின்சார அதிர்ச்சியின் காரணமாகவோ உயிரிழக்க நேரிடுவதால் அவர்களுக்கும் ரிஸ்க் அலவன்ஸ் வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையை நாம் முன் வைத்த போது அதை பரிசளிப்பதாக வாக்களித்தார்.
கேட்டரிங் டிபார்ட்மெண்டில் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்து, பின் நிரந்தரமான பேரர்களுக்கு அவர்களின் அந்த பணி காலத்தின் பாதியை பென்சனரி பயன்களுக்கு கணக்கிட எடுத்துக்கொள்ள நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ள நிலையில் இதுகுறித்து பொதுவான உத்தரவை ரயில்வே அமைச்சகம் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பி உள்ளோம். அதேபோல எக்ஸ் கேடரில் உள்ள தண்டவாள பழுது கண்டுபிடிக்கும் தொழிலாளர்களின்(USFD) 18 பேரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரிசீலிக்க ஏற்றுக்கொண்டார்.
தெற்கு ரயில்வேயில் முறைப்படி பணியமர்த்தப்பட்ட 531 சப்ஸ்டிடியூட்டுகளான ஆக்டோபரண்டீசுகள் பணி நிரந்தரமும் பதவி உயர்வும் இன்றி உயர் நீதிமன்ற வழக்கின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி, அவர்களுக்கு அந்த வழக்கை விரைந்து முடிக்க ரயில்வே அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. டி ஆர் இ யூ சார்பாக 13 கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. அந்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்தார்.
பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயிலுக்கான ட்ராக்சன் மோட்டார் இறக்குமதி செய்யப்படுகிறது என்றும், அதனை ரயில் பெட்டி தொழிற்சாலையிலேயோ அல்லது சித்தரஞ்சன் லோகோ மோட்டிவ் ஒர்க்சிலோ அல்லது பெல் மூலமாகவோ உற்பத்தி செய்ய வேண்டும். அப்போதுதான் ஆத்ம நிர்பார் பூர்த்தி அடையும் என்று ரயில் பெட்டி தொழிற்சாலை சங்கம் கூறியதை பரிசீலிப்பதாகவும் கூறினார்.