செய்திகள்

காணாமல் போன மொபைலை கண்டுபிடித்து தருவதில் முதலிடம் இடம்பிடித்த மாநிலம் எது தெரியுமா?

ஜெ. ராம்கி

வ்வொரு மாதமும் இந்தியாவில் 2 கோடி மொபைல் விற்பனையாகிறது. அதே நேரத்தில் 50 ஆயிரம் மொபைல் திருடுபோகிறதாம்.  மொபைல் திருடு போனால் தேடி கண்டுபிடிக்க காவல் நிலையத்திற்கு செல்லவேண்டியிருந்தது.  இதை தவிர்க்க, காணாமல் போன மொபைல் பற்றிய விபரங்களை இணையத்தளத்தில் பதிவு செய்து முடக்கச் செய்யலாம்.

காவல்துறையில் ஏற்கனவே பணிச்சுமை, ஆள் பற்றாக்குறை இருக்கிறது. ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. இந்நிலையில் தொலைந்து போன மொபைலை காவல்துறை உடனே மீட்டுத் தரும் என்று எதிர்பார்க்க முடியாது.  அதே நேரத்தில் முறைப்படி புகார் அளிப்பதன் மூலம் மொபைலில் உள்ள பர்ஸனல் விஷயங்கள் தவறான நபர்களின் கைகளில் சிக்காமல் தடுத்தாக வேண்டும். அதற்கு ஒரே வழி, சிஈஐஆர் இணையத்தளத்தில் புகார் அளிப்பதுதான்.

மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, மத்திய உபகரண அடையாளப் பதிவேடு (Central Equipment Identity Register – CEIR) என்னும்  இணையத்தளத்தில் காணாமல் போன மொபைல் குறித்து புகார் அளிக்க வசதி ஏற்படுததியிருககிறது. IMEI (சர்வதேச மொபைல் எக்யூப்மென்ட் ஐடென்டிட்டி) எண் தெரிந்தால் காணாமல் போன மொபைல் குறித்து புகார் எழுப்பலாம். நம்முடைய புகாரின் அடிப்படையில் சம்பந்தட்ட போன் எங்கிருந்தாலும் பிளாக் செய்யப்பட்டுவிடும்.

டெல்லி, மகராஷ்டிராவின் சில பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் அமலில் இருக்கிறது. இதன் மூலம் தொலைந்து போன மொபைலை பிளாக் செய்துவிடலாம்.  பிளாக் செய்த மொபைல் காவல்துறையினரின் மூலமாக எளிதாக கண்டுபிடிக்கவும் முடிகிறது.

தெலுங்கானா வட்டாரத்தில் இது சிறப்பாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அங்கே காணாமல் போன மொபைல்களில் 61 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கின்றன. மும்பை மாநகரத்தில் கூட இணையத்தளத்தின் தரப்படும் புகார்களால் தினமும் 5 அல்லது 6 மொபைல்களை மீட்க முடிகிறது.

இந்தியாவில் டெல்லியில்தான் அதிகளவில் மொபைல் போன் தொலைந்து போகும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. மீட்கப்படும் மொபைல் போன் எண்ணிக்கையோ 0.6 சதவீதத்திற்கும் குறைவு என்கிறார்கள். சென்னையிலும் சிஈஐஆர் தளத்தை யாரும் பெரிய அளவில் பயன்படுத்துவதில்லை என்கிறார்கள்.  கர்நாடகா, மகராஷ்டிராவை விட தமிழ்நாடு பின்தங்கியிருககிறது. டாப் 5 லிஸ்டடில் தமிழ்நாட்டிற்கு இடமில்லை!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT