செய்திகள்

’ஒருவருக்கு வழங்கப்பட்ட கோயில் நிலத்தை மற்றவர் பெயருக்கு மாற்ற முடியாது’ உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கல்கி டெஸ்க்

துரை அழகர் கோவிலில் பட்டராகப் பணியாற்றி வந்தார் லக்‌ஷ்மணா. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான மேலமடை கிராமத்தில் இருக்கும் 1.83 ஏக்கர் நிலத்துக்கான பட்டா லக்‌ஷ்மணா பெயருக்கு வழங்கப்பட்டது. ஆனால், அவர் அந்த நிலத்தை வேறு நபர்களின் பெயருக்கு எழுதி வைத்தார். அதனை மாவட்ட ஆட்சியரும் தனது உத்தரவின் மூலம் உறுதி செய்து இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து அழகர் கோவில் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையில் இருந்தபோதே
லக்‌ஷ்மண பட்டர் இறந்து விட்டார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கோயில் தரப்பு வழக்கறிஞர், ’’கோயிலில் அர்ச்சனை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதை ஒப்புக்கொண்டதற்காக மட்டுமே லக்‌ஷண பட்டருக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. அதனை மற்றவர்களுக்கு மாற்றவோ அல்லது விற்கவோ அவருக்கு அதிகாரமில்லை. மேலும், லக்‌ஷண பட்டர் பெயரில் பட்டா வழங்கப்பட்டு இருந்தாலும் கூட, அவர் அதை மற்றவருக்கு விற்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் இடமில்லை’’ என்று வாதம் செய்தார்.

அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சார்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர், ’’அனைத்து சட்ட விதிகளையும் ஆய்வு செய்தே மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவைப் பிறப்பித்ததாகவும், அதனால் இந்த மனுவை நிராகரிக்க வேண்டும்” எனவும் வாதம் செய்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மாவட்ட ஆட்சியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் வாதத்தை ஏற்க மறுத்து, ‘’கோயிலில் சேவை செய்வதற்காக ஒருவருக்கு வழங்கப்பட்ட நிலத்தை அவர் வேறொருவர் பெயருக்கு மாற்றி எழுதி வைக்க முடியாது” என கூறி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தார்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT