பாலஸ்தீனம் மற்றும் ஈரான் ஆதரவு இயக்கமான ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டார்.
இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து பாலஸ்தீனத்தை மீட்க ஹமாஸ் என்ற இயக்கம் உருவானது. இந்த இயக்கம் பாலஸ்தீனத்தில் இருந்து வரும் இஸ்ரேலை விரட்டி, அவர்கள் நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்ற முடிவோடு போராடி வருகிறது. ஹமாஸ் இயக்கத்திற்கு உதவியாக ஹிஸ்புல்லா இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் ஈரான் நாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த இரு அமைப்புகளையும் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத பட்டியலில் இணைத்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதுமுதல், இஸ்ரேல் கொடூரமான பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா கூட போரை நிறுத்துமாறு கூறிவிட்டது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று சொல்லிவிட்டதால், தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
சமீபத்தில் லெபனா ஃபாலாக்-1 என்னும் ஈரானிய ராக்கெட்டை தமது எல்லைக்குள் வீசி, லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. ஆனால், அந்த தாக்குதலுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஈரானின் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்தது. அதை நம்பாத இஸ்ரேல், தக்க பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றது.
அதன்படி, ஹிஸ்புல்லா இயக்கம் எதிர்பார்த்ததுபோலவே தென் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால், போர் மிகவும் கடுமையாக மாறியுள்ளது. மேலும் பெக்கா பள்ளத்தாக்கில் இருந்தும் ஹிஸ்புல்லா படையினரில் சிலர் வெளியேறி இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.
இந்தநிலையில்தான் இன்று அதிகாலை ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரான இஸ்மாயில் படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் மற்றும் ஹமாஸ் இயக்கம் உறுதிச்செய்தது.
ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள தனது வீட்டில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இதில் அவரும் அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரும் வீர மரணம் அடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இஸ்மாயில் நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியையும் அவர் சந்தித்து பேசினார். பின்னர் அவருடைய வீட்டிற்கு திரும்பிய நிலையில்தான் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த படுகொலை குறித்து இஸ்ரேலிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, வெளிநாட்டு ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு நாங்கள் பதிலளிக்க முடியாது என்று கூறியுள்ளது.
அதேபோல் இஸ்மாயில் இறப்பு துல்லியமாக எப்படி நடந்தது என்றும் தெரியவரவில்லை.