Body 
செய்திகள்

22 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன ஒருவரின் உடல் பெருவில் கண்டெடுப்பு!

பாரதி

22 ஆண்டுகளுக்கு முன்னர் பெருவின் ஆண்டிஸ் மலையில் காணாமல்போன மலையேறுபவர் ஒருவரின் உடல் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வில்லியம் ஸ்டாம்ப்ஃப்ல் என்ற நபர் கடந்த ஜூன் 2002ம் ஆண்டு தனது 59 வயதில் பெருவின் ஆண்டீஸ் மலையில் பயணிக்கும்போது காணாமல்போனதாக சொல்லப்பட்டது. இதனையடுத்து ஹூவாஸ்க்ரன் மலையில் 6,700 மீட்டர் பனிச்சரிவில் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

ஆனால், சில நாட்களாக நடத்தப்பட்ட அந்த தேடுதல் வேட்டை  இறுதியில் பயனளிக்காமல் போனது. அவரைப் பற்றி எந்த தகவலோ? அல்லது இறந்துவிட்டாரா? இல்லையா? எங்குள்ளார் ? என்பது போன்ற எதுவும் தெரியாமல் இருந்தது. பெரு போலீஸார் கூற்றுப்படி, சமீபத்தில் ஆண்டீஸ் மலைத்தொடரின் கார்டில்லெரோ பிளாங்கா மலைத்தொடர் உருகியபோது மலையேறியவர்களில் சில பொருட்கள் காணப்பட்டன.

அதில்தான் வில்லியமின் உடலும் அவருடைய உடைகள் மற்றும் பூட்ஸ் ஆகியவை பனிக்கட்டியால் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. அவருடைய பாஸ்போர்ட்டும் அங்கு இருந்ததால், அவர் யாரென்ற அடையாளம் உடனே தெரிய வந்தது.

இது முதல்முறையல்ல, ஆனால் பல வருடங்கள் கழித்து ஒரு உடலை எடுக்கப்பட்டது ஆச்சர்யம்தான். ஏனெனில் இதற்கு முன்னர் இவ்வளவு காலங்கள் இடைவெளியில் எந்த உடலும் எடுக்கப்படவில்லை.

பெருவின் வடகிழக்கு மலை சிகரங்கள் உலகெங்கிலும் உள்ள மலையேறுபவர்களின் பிடித்த இடமாகும். ஆகையால் உலகளவில் நிறைய பேர் அங்கு வருவார்கள். அந்தவகையில் மே மாதம்தான் இஸ்ரேலிய மலையேறுபவர் ஒருவரின் காணாமல் போன உடல் ஒரு மாதத்திற்கு பிறகு கண்டெடுக்கப்பட்டது. அதேபோல், கடந்த மாதம் கூட இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் ஆண்ஸின் சிகரத்தை அளக்க முயன்றபோது தவறி விழுந்து இறந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது வில்லியம் பொறுத்தவரை அவரின் உயிர் போனாலும், இத்தனை ஆண்டுகளாக பனி அவரது உடலை காப்பாற்றி வந்திருக்கிறது என்பது ஒட்டுமொத்த மலையேறுபவர்களின் மனதையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT