செய்திகள்

பிரபலமாகிய பிரதமர் மோடி அணிந்திருந்த கேமோப்ளாஜ் டீ- ஷர்ட்!

கல்கி டெஸ்க்

முதுமலை சென்ற பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கேமோப்ளாஜ் டீ- ஷர்ட் தற்போது இணையத்தில் வைரலாகி பேசு பொருளாகியது. திருப்பூரில் தயாரிக்கப்பட்ட இந்த டி-சர்ட்டை மோடி அணிந்தது பெருமையாக உள்ளது என்று பெருமை கொள்கிறார் அதன் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்.

பொதுவாகவே பிரதமர் நரேந்திர மோடி அணியும் உடைகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதும் வழக்கம் தான் . அந்த வகையினில் இந்த கேமோப்ளாஜ் டீ- ஷர்ட் குறித்தும் பலவேறு செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கேமோப்ளாஜ் டீ- ஷர்ட் எங்கு தயாரானது? அதன் விலை என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக உள்ளனர்.

தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி முதுமலைக்கு சென்று ஆஸ்கர் புகழ் பொம்மன்-பெள்ளி தம்பதியரை பார்க்கச் சென்றார். அப்போது அவர் அணிந்திருந்த கேமோப்ளாஜ் டி-சர்ட் அனைவரையும் கவர்ந்து சமூகவலைதளங்களில் பேசுபொருளாகவும் ஆனது. சூழலுக்கேற்ற நிறத்தில் தயாரிக்கப்படும் இந்த கேமோப்ளாஜ் டீ- ஷர்ட் திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது என்ற தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூரைத் தலைமையகமாக கொண்ட தனியார் ஆடை நிறுவனம் இந்த டீ-ஷர்ட்டினை வடிவமைத்தது. இதுதொடர்பாக பேசிய எஸ்.சி.எம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரமசிவம், தங்கள் நிறுவனம் தயாரித்த ஆடையை பிரதமர் அணிந்தது தங்களுக்கு மிகுந்த பெருமை என்று கூறினார்.

பருத்தி இழைகள் கொண்டு இந்த டீ-சர்ட் தயாரிக்கப்பட்டதாகவும், மலையேற்றம், அட்வெஞ்சர் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது எனவும், வியர்வை உறிஞ்சும் தன்மை மற்றும் குளிர்தாங்கும் திறன் போன்றவை நிறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இத்தனை அம்சங்கள் நிறைந்த பிரதமர் அணிந்திருந்த டீ-ஷர்டின் விலை 699 ரூபாய் மட்டுமே என்று தெரிவிக்கிறார் இதன் தயாரிப்பாளர்.

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT