செய்திகள்

புதிய வகுப்பறைகள் திறப்பு மற்றும் பல்வேறு பொதுசேவை இணையதளங்களைத் தொடங்கி வைத்த முதல்வர்!

எம்.கோதண்டபாணி

ல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளை நிறைவேற்றி வருகிறது தமிழ்நாடு அரசு. இதன் தொடர்ச்சியாக, ‘ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்’ என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் அறிவித்தார்.

இந்தத் திட்டம், ‘குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்’ என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம், காட்பாடியில் 1.2.2023 அன்று நடைபெற்ற அரசு விழாவில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதன் தொடர்ச்சியாக, எட்டு மாத காலத்தில் முதற்கட்டமாக, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 150 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 1000 புதிய வகுப்பறைகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (26.9.2023) தலைமைச் செயலகத்தில் இருந்தபடி திறந்து வைத்தார்.

மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2022 - 23ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணம், உரிமக் கட்டணம் போன்றவற்றை தற்போது ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டியுள்ளது. இச்சேவைகள் அனைத்தும் இணைய வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுமக்கள் கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியல்லாத கட்டணங்கள் போன்றவற்றை இணைய வழியில் செலுத்தும் வகையில் தேசிய தகவலியல் மையத்தால் (National Informatics centre) உருவாக்கப்பட்டுள்ள https://vptax.tnrd.tn.gov.in/ என்ற வரி செலுத்தும் முனையத்தையும் (Online Tax Portal) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

அதுமட்டுமின்றி, கிராம ஊராட்சிகள் தற்போது ஊராட்சியின் பொது நிதி, மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம், அரசின் திட்டப் பணிகள் போன்ற பல்வேறு பொறுப்புகளை மேற்கொள்ள 11 வகையான கணக்குகளை பராமரித்து வருவது கடினமாக உள்ளது. அதனை எளிமைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சிக் கணக்குகள் திட்டத்தை உருவாக்கி, மூன்று கணக்குகளை மட்டுமே பராமரிக்கும் நிலையினை இந்தியன் வங்கியின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊராட்சிகள் கணக்குகள் திட்டத்தின் TNPASS என்ற புதிய இணையதளத்தையும் முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

அதேபோல், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்ப் பரப்புரைக் கழகத் திட்டத்தின் கீழ், தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் பதிவு செய்வதற்கான இணைய இணைப்பு மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இணையதளத்தினையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, எல்காட் நிறுவனத்துக்கும், அரசுத் துறைகளுக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள பிற பங்குதாரர்களுக்கும் இடையே வெளிப்படையான, விரைவான மற்றும் திறமையான முறையில் சேவைகளை வழங்குவதற்கு தானியங்கு நெறிப்படுத்தப்பட்ட தொடர்புகளை (Automated streamlined interactions) வழங்கும் ஒருங்கிணைந்த இணையதளத்தையும் (https://erp.elcot.in/) முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT