The Chief Minister inaugurated the ‘Muthalvar Padaippagam’ 
செய்திகள்

மாணவர் மற்றும் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் ‘முதல்வர் படைப்பக’ மையத்தை திறந்து வைத்தார் முதல்வர்!

கல்கி டெஸ்க்

சென்னை, கொளத்தூர் அகரம், ஜெகநாதன் தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் இணைந்து 2.85 கோடி ரூபாய் செலவில் பகிர்ந்த பணியிட மையம் எனப்படும் ‘Co-working Space’ மற்றும் மாணவர்களுக்கான ‘கல்வி மையம்’ என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய முதல்வர் படைப்பகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதல்வர் படைப்பகத்தில் UPSC, TNPSC போன்ற பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள், இங்கு வந்து படித்து பயன்பெறும் வகையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து போட்டித் தேர்வுக்கான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.

Chief Minister lays foundation stone for welfare projects

மேலும், மாணவர்கள் எந்த இடையூறுமின்றி படிக்கும் வகையில் அமைதியான சூழலும், நீண்ட நேரம் படிப்பதற்கு உகந்த இருக்கைகள், கணினி மற்றும் இணையதள வசதியும் செய்து தரப்பட்டுள்ளன. இங்கு ஒரே நேரத்தில் 51 நபர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் இவ்விடம் அமையப் பெற்றுள்ளது.

அத்துடன், போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் தொழில் தொடங்கிட இயலாத பெண்களுக்கும். ஆண்களுக்கும் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக ‘கோ ஒர்க்கிங் ஸ்பேஸ்’ எனப்படும் பணி செய்வதற்காக ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் 38 நபர்கள் முறையாக அமர்ந்து பணி செய்வதற்கான நல்ல சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 3 கலந்தாய்வு கூடங்களும், அதில் இரண்டு கூடத்தில் தலா 4 நபர்களும், ஒரு கூடத்தில் 6 நபர்களும் அமர்ந்து கலந்தாலோசனை மேற்கொள்ளும் வகையிலும், உணவு அருந்தி இளைப்பாறுவதற்காக ஒரு தளமும், என மொத்தம் மூன்று தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையிலேயே முதல் முறையாக கொளத்தூரில் தமிழ்நாடு அரசின் சார்பில் இத்தகைய சிறப்பு வாய்ந்த ‘முதல்வர் படைப்பகம்’ உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, கொளத்தூர், கந்தசாமி சாலை - வெங்கடேசன் சாலை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 64 முதல் 70 வரை உள்ள வார்டுகளில் பல்வேறு இடங்களில் மின்மாற்றிகளுக்கு ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 77 மின்மாற்றி தடுப்பு (View Cutter) அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

அதேபோல், ஜி.கே.எம். காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், வார்டு 64ல் முகமது உசேன் காலனி 5வது குறுக்கு தெருவில் 22 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒரு பல்நோக்கு மையக் கட்டடம் மற்றும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ஜி.கே.எம். காலனி 24வது ‘A’ தெருவில் 58 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 பல்நோக்கு மையக் கட்டடங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார். பின்னர், பல்நோக்கு மையக் கட்டடத்தில் உள்ள நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களையும், புதிய குடும்ப அட்டைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

இவை மட்டுமின்றி, பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம், நூலகக் கட்டடம் மற்றும் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT