Xi Jinping
Xi Jinping 
செய்திகள்

புரளிக்குப் பின் பொதுவெளியில் தோன்றிய சீன அதிபர்!

கல்கி டெஸ்க்

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான புரளிக்கு பிறகு முதல்முறையாக நேற்று பொதுவெளியில் தோன்றினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்த 16-ம் தேதி நள்ளிரவு நாடு திரும்பினார்.

அதன் பிறகு அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. இந்நிலையில் அவரை சீன ராணுவம் சிறைபிடித்து வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 இந்நிலையில் அதிபர் ஜின்பிங் தனது வெளிநாட்டுப் பயணத்துக்கு பிறகு முதன்முறையாக நேற்று பொதுவெளியில் தோன்றினார்.

கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் சாதனைகள் தொடர்பாக பெய்ஜிங் நகரில் நடைபெறும் கண்காட்சிக்கு நேற்று அவர் முகக்கவசம் அணிந்து வந்தார். இதன்மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 உஸ்பெகிஸ்தான் பயணம் சென்று வந்தபின் சீன நாட்டு சட்டதிட்டத்துக்கு உட்பட்டு, சீன அதிபர் ஜின்பிங் தன்னை 2 வாரங்களுக்கு தனிமைப் படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

எதிர்மறையான சுய பேச்சு தரும் தீமைகள் தெரியுமா?

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 கணிப்பு: வேதா கோபாலன்

கோரைக்கிழங்கு பிரசாதமாக தரும் கோயில் எது தெரியுமா?

தேவ மருந்து தவசிக்கீரை!

Bread Kulfi Recipe: பிரட் இருந்தால் போதும், வீட்டிலேயே செய்யலாம் சுவையான குல்பி!

SCROLL FOR NEXT