செய்திகள்

உதவித்தொகை கிடைக்காது மனமுடைந்து அழுத முதாட்டிக்கு உடனே உதவிய ஆட்சியர்!

கல்கி டெஸ்க்

மிழ்நாட்டில் அறுபது வயது கடந்து, உறவினர் யாருடைய ஆதரவும் இல்லாமல் வாழும் முதியோர்கள் அனைவருக்கும் அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல், ஊனமுற்றோர் மற்றும் விதவையருக்கும் உதவித்தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது.

மதுரை மாவட்டம், கீரைத்துறை பகுதியைச் சேர்ந்தவர் சுருளியம்மாள். இவருக்கு 85 வயது ஆகிறது. இவர் தனக்குக் கிடைக்கும் முதியோர் உதவித்தொகையைக் கொண்டுதான் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார். இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக இந்த மூதாட்டிக்கு அரசின் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மூன்று மாதங்களாக உதவித் தொகை கிடைக்காததால் அந்த மூதாட்டி பெரும் சிரமத்தில் இருந்து இருக்கிறார்.

இது பற்றி அந்த மூதாட்டி புகார் கொடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். தனது பிரச்னையை அங்கிருந்தவர்களிடம் கூறியதோடு, அவர்களின் உதவியோடு ஒரு மனுவை எழுதி மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகரிடம் கண்ணீர் மல்கியபடி புகாராக அளித்து இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கையில் இறங்கிய மாவட்ட ஆட்சியர், அது தொடர்பான அதிகாரிகளை உடனே அழைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் மூதாட்டியின் செல்போன் தொடர்பு எண் முறையாக இல்லாமல் இருந்ததாலேயே அவரது உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதையடுத்து, அந்த மூதாட்டிக்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ அதைச் செய்து அவரது உதவித் தொகைக்கு வழி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஆட்சியரின் உத்தரவை அடுத்து மளமளவென பணிகள் செயல்படுத்தப்பட்டு அந்த மூதாட்டிக்கு அவரது உதவித்தொகை ரொக்கமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தோர் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

கவிதை: அவளுக்கென்று ஒரு மனம்!

பித்தப்பை கற்கள் உருவாவதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்!

SCROLL FOR NEXT