G20 
செய்திகள்

இந்தோனேஷியாவில் ஜி 20 மாநாடு நிறைவு! அடுத்த ஆண்டு இந்தியாவில் ஜி 20 நடைபெறும்!

கல்கி டெஸ்க்

ஜி 20 எனப்படும் உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டம், ஆசிய நாடான இந்தோனேஷியாவில் நடைபெற்று வந்தது. அந்த மாநாடு நேற்றுடன் முடிவடைந்தது. ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி இன்று டில்லி திரும்பியுள்ளார். பாலி சர்வதேச விமான நிலையத்தில் தூதரக அதிகாரிகள் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தனர். இந்தோனேசிய உச்சி மாநாட்டில் அடுத்த ஓராண்டுக்கான பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கபட்டுள்ளது..

ஜி 20 மாநாட்டில் உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி ஜி 20 தலைவர்களிடம் எடுத்துரைத்தார். ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ நேற்று ஒப்படைத்தார். வரும் டிசம்பர் 1ம் தேதிமுதல் ஜி20 அமைப்பின் செயல்பாடுகளை இந்தியா முறைப்படி தொடங்குகிறது. ஜி20 அமைப்பின் அடுத்த உச்சி மாநாட்டை தலைநகர் டெல்லியில் 2023 செப்டம்பரில் இந்தியா நடத்த உள்ளது.

G 20

ஜி 20 மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஜி.20 அமைப்பின் அடுத்த ஆண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. இதற்கான அதிகார பொறுப்பைஏற்றுக் கொண்டார் பிரதமர் மோடி. இந்தியாவின் தலைமையில் ஜி20 அமைப்பு லட்சியமிக்கதாக, தீர்க்கமானதாக, சிறப்பாக செயல்படும் என்று அளித்தார் பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.

புவிசார் அரசியல் பதற்றம், பொருளாதார மந்தநிலை, உணவுமற்றும் எரிபொருட்கள் விலைஉயர்வு, கரோனா பெருந்தொற்றின் நீண்டகால பாதிப்புகள் ஆகியவற்றை உலகம் ஒரே நேரத்தில் சந்தித்துள்ள வேளையில், ஜி-20அமைப்புக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது.

இந்த நேரத்தில் உலக நாடுகள் ஜி-20 அமைப்பை நம்பிக்கையுடன் பார்க்கின்றன. அதற்கேற்ப,இந்தியாவின் தலைமையில் ஜி-20அமைப்பு அனைத்தும் உள்ளடங்கியதாக, லட்சியமிக்கதாக, தீர்க்கமானதாக, சிறப்பாக செயல்படும் என உறுதியளிக்கிறேன் என்றார் பிரதமர் மோடி.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT