மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பெயரை பல நூறு ஆண்டுகள் நினைவிருக்கும் வகையில் இந்த போட்டியானது நடத்தப்படுகிறது என அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மறைந்த கால்பந்து வீராங்கனை பிரியா நினைவு சுழற் கோப்பை மகளிர் கால்பந்தாட்ட போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் துவங்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்ய நாதன், மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை நினைவு போற்றும் வகையில் பெரிய நினைவு கால்பந்தாட்ட போட்டி இன்று துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.ஐந்து மாநிலத்தைச் சேர்ந்த 21 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பெயரை பல நூறு ஆண்டுகள் நினைவிருக்கும் வகையில் இந்த போட்டியானது நடத்தப்படுகிறது என விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
சென்னை வியாசர் பாடியைச் சேர்ந்த ரவிக்குமார் மகள் பிரியா, சென்னைராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் 15 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்து விளையாட்டில் தேசிய அளவிலானபோட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார் . ப்ரியா மூட்டு வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்தார் .
பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் உயர்சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரதுவலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுப்பதற்காக, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, வலது கால் அகற்றப்பட்டது. ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில், சிகிச்சையில் இருந்த மாணவிப்ரியாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து சிகிச்சைப் பலனின்றி ப்ரியா உயிரிழந்துள்ளார்.
ஒரு பெரும் கனவை சுமந்துகொண்டு சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாக கனவு கண்டு கொண்டிருந்த ப்ரியா இருந்த தவறான ஒரு சிகிச்சை கொடுத்ததன் காரணமாக காலை அகற்ற வேண்டிய கட்டாயம் வந்ததாக சொல்லப்பட்டது. அதனால் தனது உயிரையும் இழந்துள்ளார் ப்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.