செய்திகள்

மாவீரன் அலெக்சாண்டர் கண்டுபிடித்த அதிசய இந்துப்பு.

கிரி கணபதி

பாகிஸ்தானில் அதிகப்படியாக வெட்டி எடுக்கப்படும் இந்துப்பு. மாவீரன் அலெக்சாண்டரின் இந்திய படையெடுப்பின் போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த இந்துப்பு கிடைக்கும் பாறைகளை தங்கள் நாட்டின் பெருமைமிகு அடையாளமாக பாகிஸ்தான் கருதுகிறது. ராஜபோக விருந்து பரிமாறப்பட்டாலும் அதில் மிகச் சிறிய அளவில் சேர்க்கப்படும் உப்புதான் விருந்தின் சுவைக்கு காரணமாக இருக்கும். அப்படிப்பட்ட உப்பில் டேபிள் சால்ட், கருப்பு உப்பு, இமயமலை இளஞ்சிவப்பு உப்பு, கடல் உப்பு என ஏராளமான வகைகள் இருக்கின்றன. இவற்றில் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் உப்புதான் இந்துப்பு என அழைக்கப்படுகிறது. இது 600 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும், மிகுந்த தூய்மையானது என்றும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். 

கடல் உப்புகளைப் போல நச்சு மற்றும் தொற்றுண்ணி களிலிருந்து பாறைகளால் இந்த வகை உப்புகள் பாதுகாக்கப்பட்டதாகும். கல் உப்பில் சோடியம் குளோரைடு அதிகம் உள்ளது. இந்துப்பில் பொட்டாசியம் குளோரைடு அதிகமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சோடியம் குளோரைடு உள்ள கல் உப்பைப் போல பொட்டாசியம் குளோரைடு உள்ள இந்துப்பை மருத்துவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ளச் சொல்கின்றனர். அத்துடன் இந்துப்பில் இயற்கையாகவே அயோடின் சத்து, இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துக்களும் இருக்கின்றன. 

பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் இந்துப்பு, சுத்தமான நீரிலும், இளநீரிலும் ஊறவைத்து பதப்படுத்தி பக்குவப்படுத்தப்படுகிறது. ஹிமாலயன் உப்பென்று இந்துப்பு அழைக்கப்பட்டாலும், இது பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் ஜீலன் நதிக்கரையில் தான் அதிகம் கிடைக்கிறது. இஸ்லாமாபாத் அருகே உள்ள கேவ்ரா என்ற உப்பு சுரங்கத்தில்தான், இந்துப்பு அதிக அளவில் கிடைக்கிறது. உலகிலேயே இது இரண்டாவது மிகப்பெரிய உப்புச் சுரங்கமாகும். 

இங்கு 300க்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரி கின்றனர். இந்த சுரங்கத்தில் நாள் ஒன்றுக்கு 1000 டன் உப்பு பாறைகளிலிருந்து எடுக்கப்படுகிறது. இன்னும் 350 ஆண்டுகளுக்கு இந்துப்புவை இந்த சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கலாம் என்கின்றனர். இன்னும் 6.7 பில்லியன் டன் உப்பு இந்த சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்க முடியும் எனச் சொல்கின்றனர். சுமார் 25 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த சுரங்கத்திற்குள் குட்டி ரயில் ஒன்றுதான் தொழிலாளர்களை ஏற்றி செல்லும். 

கிரேக்க மன்னர் அலெக்சாந்தர் கிமு 3ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தபோது, இதைக் கண்டுபிடித்தார் எனச் சொல்கிறார்கள். அதாவது அலெக்சாந்தரின் படையைச் சேர்ந்த குதிரைகள், கேவ்ரா பகுதியில் இருந்த பாறைகளை அடிக்கடி தங்கள் நாவால் நக்கி வந்துள்ளன. குதிரைகள் ஏன் இப்படி செய்கிறது என படைவீரர்கள் ஆராய்ச்சி செய்தபோது தான் அந்தப் பாறைகளில் உப்பு படிமங்கள் நிறைந்திருப்பது தெரியவந்தது. அப்படிதான் இந்துப்பு படிந்துள்ள பாறைகள் உலகிற்குத் தெரிய வந்தது. 

என்னதான் இது பாகிஸ்தானில் கிடைத்தாலும், அந்நாட்டிடம் இதை முறையாக பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் தொழில்நுட்பம் இல்லை. எனவே அங்கிருந்து உப்பை வெட்டி எடுத்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு இந்தியாவின் தயாரிப்பு என்ற பெயரில் விற்கப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கிறதாம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT