செய்திகள்

நாளை முதல் 37 நாடுகளில் வெளியாகிறது ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்!

கல்கி டெஸ்க்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய திரைப்படம், ‘தி கேரளா ஸ்டோரி.’ சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கேரளாவில் வெளியானபோது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு தடைகளைச் சந்தித்த இந்தப் படம் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் கடந்த மாதம் 5ம்தேதி இந்தியா முழுவதும் பல்வேறு திரையங்குகளில் வெளியானது.

ஒரு தரப்பினரின் ஆதரவையும் மற்றொரு தரப்பினரின் எதிர்ப்பையும் எதிர்கொண்டது இந்தத் திரைப்படம். இந்தப் படம் குறித்து அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள் என பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அப்படி என்னதான் இந்தப் படத்தின் சர்ச்சைக்குரிய கதை என்றால், கேரளாவைச் சேர்ந்த அப்பாவி பெண்கள் இஸ்லாம் மத மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்பதுதான். கேரள மாநிலத்தில் மட்டும் இதுபோன்று பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம். அப்படி நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதுதான் இந்தப் படம் என்று படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்கு மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், உத்திரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்துக்கு வட மாநிலங்களில் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து நாளை முதல் 37 வெளி நாடுகளில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட இப்படக் குழுவினர் முடிவு செய்து இருக்கிறார்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT