ஆவின் 
செய்திகள்

ஆவின் பால் விற்பனை புறக்கணிக்கப்படும்! தமிழக பால்முகவர் சங்க தலைவர் பொன்னுசாமி!

கல்கி டெஸ்க்

ஆவின் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது வாடிக்கையாகி வருகிறது. ஏற்கனவே தீபாவளிக்கு விற்கப்பட்ட இனிப்புகளில் தரமில்லை என புகார்கள் எழுந்திருந்தது . அதன் பிறகு ஆரஞ் பால் பேக்கெட்களின் விலை ரூபாய் 12/- உயர்த்தப்பட்டது சர்ச்சையாகியது.

தற்போது ஆவின் பால் விற்பனை புறக்கணிக்கப்படும் என தமிழக பால்முகவர் சங்க தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அது குறித்து தனது கருத்தினை கூறியுள்ளார்.

Aavin

'ஆவின் பாலகங்களின் முகவர்களை வஞ்சிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால், ஆவின் பால் விற்பனை புறக்கணிக்கப்படும்" என தமிழக முகவர் பால்சங்க தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளார்.

ஆவின் நிறுவனத்தை, தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கும் பணி சத்தமின்றி நடந்து வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

ஆவின் பாலகங்களை நடத்துபவர்களுக்கு, நெய் உள்ளிட்ட பால் பொருட்களை முறையாக வினியோகம் செய்வதில்லை.கடந்த 5ம் தேதி பால் கொள்முதல் உயர்வு காரணமாக, ஆரஞ்ச் பாக்கெட் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டது.

Aavin

மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு லிட்டர் 46 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கோவையில் உள்ள தனியார் நிறுவன மார்க்கெட்டில், 1 லிட்டர் 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக பாலகங்களை நடத்துபவர்களிடம், ஆவின் நிர்வாகம் உறவை முறித்து, தனியார் நிறுவனத்துடன் ஒட்டி உறவாடும் பணியை, தற்போதைய தமிழக அரசு சத்தமின்றி செய்து வருகிறது.

பாலகங்களை நடத்தும் ஏஜன்டுகளை அழிக்க, ஆவின் நிர்வாகம் வேலை செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. பால் கொள்முதல் மற்றும் விலை உயர்த்தப்பட் டாலும், 1 லிட்டர் பால் விற்பனை செய்யும் ஏஜன்டுகளுக்கு, 2 ரூபாய் மட்டுமே கமிஷனாக வழங்கப் படுகிறது.

ஆவின் முதுகெலும்பாக இருக்கும் ஏஜன்டுகளை வஞ்சிப்பதை ஏற்க முடியாது. ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை, தமிழகம் முழுதும் புறக்கணிப் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT