Attack 
செய்திகள்

ஹவுதிகளால் அமெரிக்கா சந்தித்த அவமானம்!

பாரதி

ஏமனில் இருக்கு ஹவுதிகளை எதிர்த்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை ஏமன் தாக்குப்பிடித்ததோடு, தற்போது இஸ்ரேலையும் ட்ரோன்கள் மூலம் தாக்கியுள்ளது. இதனால், அமெரிக்காவை உலக நாடுகள் நக்கல் அடித்து வருகின்றன.

இஸ்ரேல் பாலஸ்தீன போர் காரணமாக பல உலக நாடுகள் தங்களது ஆதரவு நாடுகளுக்கு உதவியாக இருந்து வரும் நிலையில், சில நாடுகள் எதிரி நாடுகளாக மாறியிருக்கின்றன. இஸ்ரேல் பாலஸ்தீன போரில், பாலஸ்தீனத்திற்கு உதவி செய்து வருகிறது ஏமன். ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இருக்கும் ஹவுதி, இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தாக்குவதற்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் படை ஹவுதியை தாக்கியது. இஸ்ரேல் ஏமனின் துறைமுகத்தைத் தாக்கியதில், 6 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல், செங்கடல் பகுதியில் பதற்றம் அதிகரிப்பதற்கும், முழு அளவிலான மோதலுக்கு வழிவகுப்பதற்கும் வாய்ப்புள்ளது. ஜூலை 19ம் தேதி இதற்காக இஸ்ரேல் உள்ளே ஹவுதிகள் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தனர். இது உலக அரசியலில் மிகப்பெரிய விஷயமாக மாறியிருக்கிறது.

ஏனெனில், உலக நாடுகளிலேயே மிகப்பெரிய நாடான அமெரிக்கா, ஹவுதியை பலமாக தாக்கியது. இதனால், ஏமனுக்கு பெரிய அளவில் பொருட்செலவு ஏற்பட்டது. ஆனால், இது ஏமனை சிறிதளவுகூட பாதிக்கவில்லை என்பதுதான், பெரிய விஷயமாக பேசப்படுகிறது. ஏனெனில், ஒரு பெரிய நாடான அமெரிக்காவின் தாக்குதல் சிறிய அளவுக்கூட பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

அதுமட்டுமல்லாது, உடனே ஏமன் இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், தாக்குதல் நடத்தும் அளவிற்கு ஏமனிடம் பொருட்செலவு உள்ளது, ஆகையால், அமெரிக்கா அவ்வளவு வலிமையற்று போய்விட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் நடத்திய தாக்குதல்கள் எதுவும் ஹவுதிகளை முடக்கி நிறுத்தவில்லை. இதனால், செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கப்பல் கட்டணம்தான் தாறுமாறாக உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூட இந்த தாக்குதல்கள் பயனற்றவை என்று ஒப்புக் கொண்டார். ஆனால், அவர் இந்த தாக்குதல்களை நிறுத்த மறுத்துவிட்டார்.

இதனால், மேலும் ஒரு பெரிய போர் தொடங்கவுள்ளதா என்ற கேள்வி உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT