செய்திகள்

இந்தியை திணிப்பதிலேயே ஒன்றிய அரசு தீவிரமாக உள்ளது: முதலமைச்சர் ஸ்டாலின்!

எல்.ரேணுகாதேவி

ஒவ்வொரு இந்திய குடிமகனும் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் நிலையில், ஒன்றிய அரசு இந்தியை திணிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நியூ இந்தியா அசூரன்ஸ் காப்பீடு நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டுமே பயன்படுத்துள்ளதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், “இந்தியாவின் அனைத்துக் குடிமக்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துவரும் நிலையில், ஒன்றிய அரசும் அதன் நிறுவனங்களும் பிற இந்திய மொழிகளைவிட இந்திக்கு அனைத்து வழிகளிலும் தேவையற்ற மற்றும் நியாயமற்ற ஆதரவைத் தொடர்ந்து வழங்குகின்றன. மேலும், மக்கள் நலனுக்காக அல்லாமல், இந்தியை நம் தொண்டையில் திணிக்கவே அவர்கள் தங்கள் மதிப்புமிக்க வளங்களைச் செலவிட விரும்புகிறார்கள்.

இவ்வகையில் சமீபத்தில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அநீதியானது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீர்ஜா கபூர் இந்தி பேசாத மக்களையும் மற்றும் இந்தி பேசாத ஊழியர்களையும் அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்தியாவில் இந்தி பேசாத குடிமக்கள் தங்கள் கடின உழைப்பாலும் திறமையாலும் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தங்களின் பங்களிப்புகளை அளிக்கும்போதிலும், அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதைச் சகித்துக் கொள்ளும் காலம் மலையேறிவிட்டது.

இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடும், திமுகவும் எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம். ஒன்றிய அரசில் ரயில்வே, அஞ்சல் துறை, வங்கி, நாடாளுமன்றம் என அனைத்து இடங்களிலும் எம்மையும், எமது மக்களையும் அன்றாடம் பாதிக்கும் வகையில் இந்திக்கு வழங்கப்படும் அவசியமற்ற சிறப்புநிலையை நீக்குவோம்.

நாங்கள் எங்கள் வரிகளை செலுத்துகிறோம், முன்னேற்றத்திற்குப் பங்களிக்கிறோம், எங்கள் வளமான மரபு மற்றும் இந்த நாட்டின் பன்முகத்தன்மையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். எங்கள் மொழிகள் சமமாக நடத்தப்பட வேண்டும். எமது மண்ணில் தமிழுக்குப் பதிலாக இந்தியைத் திணிக்கும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம் ” என தெரிவித்துள்ளார்.

அதிக அளவில் மக்களை ஈர்க்கும் உலகின் டாப் 10 மியூசியங்கள்!

iPad Mini: 2024 இறுதிக்குள் அறிமுகமாகும் ஆப்பிள் சாதனம்! 

கோயில் செல்லும்போது அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஆன்மிகத் தகவல்கள்!

ஏடிஎம் திருட்டு – பணத்தைப் பாதுகாக்க பத்து வழிகள்!

கொளுத்தும் வெயிலிலும் ஒரு நன்மை இருக்கிறது; எப்படி தெரியுமா?

SCROLL FOR NEXT