தை மாதம் 2ஆம் நாள் திருவள்ளுவர் தினமாக ஆண்டுதோறும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வருடம் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று வள்ளுவர் கோட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வள்ளுவர் கோட்டத்தை பார்வையிட்டார். பின்னர் பல்வேறு விருதினை வழங்கி தமிழ் அறிஞர்களை கவுரவித்தார்.
பின்னர் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விருதினை வழங்கி தமிழ் அறிஞர்களை கவுரவித்தார். 2023ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது இரணியன், நா.கு. பொன்னுசாமிக்கு வழங்கப்பட்டது. 2022ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது உபயதுல்லாவிற்கும், பெருந்தலைவர் காமராசர் விருது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் வழங்கப்பட்டன. பாரதியார் விருதை ஆ.இரா.வேங்கடாசலபதி, பாரதிதாசன் விருதை வாலாஜா வல்லவன் ஆகியோர் பெற்றனர்.
திருவள்ளுவர் நாளில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில்இரணியன் திரு. நா.கு. பொன்னுசாமி அவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருதையும், கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களுக்குத் தந்தை பெரியார் விருதையும், திரு. எஸ்.வி. ராஜதுரை அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் விருதையும் பெற்றனர்
திரு.வி.க. விருது நாமக்கல் பொ. வேல்சாமி, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது கவிஞர் மேத்தா, தந்தை பெரியார் விருது கவிஞர் கலி.பூங்குன்றன், அண்ணல் அம்பேத்கர் விருது எஸ்.வி. ராஜதுரை, தேவ நேயப் பாவாணர் விருது முனைவர் இரா. மதிவாணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.