புலி  
செய்திகள்

மூணாறில் சிக்கியது புலி; 10 மாடுகளை கொன்ற கொடூரம்!

கல்கி டெஸ்க்

கேரளாவின் மூணாறு எஸ்டேட் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் புலி ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வந்ததாக வனத்துறையினருக்கு புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து வனத்துறையினர் புலியை கூண்டு வைத்து பிடித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புலி கூண்டு

கடந்த 2 நாட்களில் மட்டும் 10 மாடுகளை தாக்கி கொன்ற அந்த புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர். கேரள மாநிலம் மூணாறில் உள்ள நயமக்காடு எஸ்டேட் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய புலி ஒன்று 10 மாடுகளை தாக்கி கொன்றதால் மக்கள் பீதியில் உறைந்தனர். மேலும் கால்நடைகளை குறிவைத்து தாக்கி கொள்ளும் புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரி சாலை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நயமக்காடு பகுதியில் புலியை பிடிக்க 3 இடங்களில் வனத்துறையினர் கூண்டு அமைத்தனர்.

மூணாறு எஸ்டேட்

குறிப்பாக 5 மாடுகளை தாக்கி கொன்ற மாட்டுபட்டியில் பெரிய கூண்டு வைத்தனர். அதில் நேற்று இரவு 8.30 மணி அளவில் ஆவேசப்புலி வசமாக சிக்கியது. கூண்டுக்குள் அகப்பட்ட புலியை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாடுகளை கொன்ற புலியினை பிடித்துவிட்டதால் மூணாறு பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கேரளா வனத்துறை அதிகாரிகளை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT