இன்று சூரிய கிரகணமானது மாலை 5.11 மணிக்குத் துவங்கி மாலை 6. 27 மணிவரை நீடிக்கவுள்ள நிலையில், இன்று முழு நாளும் திருப்பதி ஏழுமலையான கோயில் நடை திறக்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இன்று சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் உட்பட திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் காலை 8.11 மணி முதல் மாலை 7.40 மணி வரை நடை அடைக்கப்பட்டு இருக்கும்.
சூரிய கிரகணம் முடிந்த பின் சம்பிரதாய முறையில் கோவில் சுத்தம் செய்யப்படும். அதனை தொடர்ந்து பக்தர்கள் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலை பொறுத்த வரை இன்று இரவு முதல் நாளை காலை வரை இலவச தரிசனம் மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
கிரகணம் காரணமாக இன்று ஏழுமலையான் கோவிலில் கட்டண சேவைகள் நடைபெறாது. அதேபோல் திருப்பதி மலையில் இன்று காலை தொடங்கி கிரகண முடியும் வரை அன்னதான கூடம், விடுதி ஆகியவையும் மூடப்பட்டிருக்கும்.
-இவ்வாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.