திருப்பதி கோயில்  
செய்திகள்

சந்திர கிரகணத்தன்று திருப்பதி கோயில் தரிசனம் ரத்து!

கல்கி டெஸ்க்

இம்மாதம் 8-ம் தேதி சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு, அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படும் என்பதால், அனைத்து வகை தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 -இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்ததாவது:

 நவம்பர் 8-ம் தேதி சந்திர கிரகணம் ஏற்படுவதால், அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோயில்  சுமார் 12 மணி நேரம்  மூடப்பட உள்ளது. மேலும் அன்றைய தினம் அனைத்து  வகையான தரிசனங்கள் மற்றும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சந்திரகிரகணம் மதியம் 2:39 முதல் 6:19 வரை இருக்கும் என்பதால் ஏழுமலையான்  கோயில் காலை 8:40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7:20 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.

இதனால்  விஐபி தரிசனம், இலவச தரிசன டிக்கெட், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீபாலங்கார சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் உள்ள பெற்றோர்கள், என்ஆர்ஐக்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சலுகை பெற்ற தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 சந்திர கிரகணம் முடிந்த பிறகு கோயில் கதவுகள் திறக்கப்பட்டு  இலவச தரிசனத்தில் மட்டும் வைகுண்டம் காம்பளக்ஸ் இரண்டில் இருந்து பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

வழக்கமாக கிரகணம் நாட்களில், கிரகணம் முடியும் வரை சமையல் செய்ய மாட்டார்கள் என்பதால் அன்னபிரசாத கூடமும் கிரகணம் முடியும் வரை மூடப்பட்டிருக்கும்.

 -இவ்வாறு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT