மாதிரி படம்
மாதிரி படம் 
செய்திகள்

500 ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி.. அலைமோதும் கூட்டம்!

விஜி

மிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை தொடங்கியது. இதானல் நூற்றுக்கணக்கான மக்கள் ரேஷன் கடைகளில் அலைமோதினர்.

கடந்த ஒரு மாத காலமாகவே தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்தது. அதுவும் 2 நாட்களுக்கு முன்பு திடீரென டபுள் செஞ்சுரி அடித்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் கவலையடைந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, தக்காளி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் கூட்டுறவுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கூட்டுறவுத்துறையின் கீழ் சென்னையில் செயல்படும் 27 பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் முதற்கட்டமாக வடசென்னையில் 32 ரேஷன் கடைகளிலும் மத்திய மற்றும் தென் சென்னையில் தலா 25 ரேஷன் கடைகள் என மொத்தம் 82 கடைகளிலும், மாநிலத்தில் பிற பகுதிகளில் 215 கடைகள் என மொத்தம் 302 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதிப்படையாமல் தடுக்கும் வகையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் தக்காளி விற்பனை 302 ரேஷன் கடைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் தக்காளி விற்பனையை 500 ரேஷன் கடைகளுக்கு நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு, இன்று முதல் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை அறிந்த மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தக்காளியை வாங்கி செல்கின்றனர்.

Surrounded by Idiots புத்தகம் கற்றுத்தந்த வாழ்க்கை பாடங்கள்! 

நீரிழிவு நோயாளிகள் பலாப்பழம் சாப்பிடலாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

ஏகாதசி விரதத்துக்கு இணையான பலனைத் தரும் விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு!

வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய 7 விஷயங்கள்!

தும்மல் பற்றி அறிய வேண்டிய சில சுவாரஸ்ய தகவல்கள்!

SCROLL FOR NEXT