செய்திகள்

சென்னை - தேனி - போடி- மதுரைக்கு பயணம் போறீங்களா?

கல்கி டெஸ்க்

மதுரை முதல் தேனி வரை ரயில் இயக்கப்பட்டு வந்த ரயில் மதுரை முதல் போடி நாயக்கனூர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தினமும் காலை 8. 05 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு தேனிக்கு ரயில் 9.35 க்கு வந்தடையும். தேனியில் இருந்து 9:42 மணிக்கு கிளம்பும் ரயில் அங்கிருந்து போடிநாயக்கனூர் சென்றடைகிறது.

அதேபோல தினசரி மாலை 5.50 மணிக்கு போடியில் இருந்து கிளம்பும் ரயில் 6.15 க்கு தேனி வந்தடையும். பின்னர் தேனியில் இருந்து புறப்பட்டு 06.34க்கு ஆண்டிப்பட்டி, 06.54 மணிக்கு உசிலம்பட்டி, 07.29 மணிக்கு வடபழஞ்சி என 07.50 மணிக்கு மதுரை ரயில் நிலையம் சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

போடிநாயக்கனூர் - சென்னை :

பிப்ரவரி 19, 2023 முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சேலம், கரூர் வழியாக போடிநாயக்கனூருக்கு வாரம் மூன்று முறை அதாவது திங்கள், புதன் , வெள்ளி ஆகிய நாட்களிலும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. அதேபோல மரு மார்க்கமாக போடிநாயக்கனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வாரம் மூன்று முறை அதாவது ஞாயிறு , செவ்வாய் , வியாழன் ஆகிய நாட்களில் ஏற்கெனவே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் மதுரை வரை வாரம் மும்முறை இயக்கப்படும் ஒரு ரயிலானது போடி வரை நீட்டிக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

போடிநாயக்கனூர் (BDNK) - மதுரை (MDU) - சென்னை சென்ட்ரல் (MAS) எக்ஸ்பிரஸ் (20602) வாரம் மூன்று முறை இயக்கப்படுகிறது. அதாவது ஞாயிறு, செவ்வாய், வியாழன் மட்டும் நீக்கப்பட உள்ளது. இந்த ரயில் 20:30 போடிநாயக்கனூரில் கிளம்பி 20:50 தேனி, 21:10 ஆண்டிபட்டி, 21:30 உசிலம்பட்டி, 22:50 மதுரை, 23:55 திண்டுக்கல், 00:55 கரூர்,

02:20 சேலம், 05:15 காட்பாடி,07:05 பெரம்பூர், 07:55 சென்னை சென்ட்ரல் சென்றடைகிறது. மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரல் - மதுரை - போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் (20601) வாரம் மூன்று முறை அதாவது திங்கள், புதன், வெள்ளி மட்டும் இயக்கப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு கிளம்பும் ரயில் ,00:15 காட்பாடி, 03:00 சேலம், 04:40 கரூர், 06:00 திண்டுக்கல், 7.10 க்கு மதுரை வந்தடைகிறது. மதுரையிலிருந்து கிளம்பி 8.38க்கு தேனி வந்தடையும் எனவும் அங்கிருந்து கிளம்பி 9.35 மணிக்கு போடிநாயக்கனூர் வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

நீண்ட நாட்களுக்கு பிறகு போடிநாயக்கனுர் முதல் சென்னை வரை எக்ஸ்பிரஸ் இயக்கப்பட உள்ளதால் தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில்உள்ளனர்

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT