(உலக ரத்த தான தினம்: ஜூன் 14).
உலக சுகாதார நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டுதோறும் ஜுன் 14 அன்று
உலக ரத்த தான நாள் கடைபிடிக்கபட்டு வருகின்றது. ரத்த தானம் செய்வது என்பது உயிர் தானம் செய்வதற்கு சமம். மனிதர்களின் உடலின் உறுப்புகள் அனைத்தும் சீராக செயல்பட உதவுவது ரத்தமே. இந்த ரத்தமே ஆக்ஸிஜனை உடலெங்கும் எடுத்துசெல்கிறது. இத்தகைய இன்றியமையாத ரத்தத்தை தானம் செய்வதன் மூலம் பல உயிர்களை காப்பாற்றலாம்.
ரத்ததானம் செய்வதால் தானமாக பெறுபவர் மட்டுமல்லாமல், அதனை கொடுப்பவரும் பல்வேறு பயன்களை பெறலாம்.குறிப்பிட்ட சீரான இடைவெளியில் ரத்த தானம் செய்வதன் மூலம் உடலில் இயற்கையாக புது ரத்தம் பெருக்கெடுக்கும். இரத்தத்தில் உள்ளஹீமோகுளோபின் அளவும் சீரடையும். அத்துடன் இதய ஆரோக்கியத்தையும்மேம்படுத்துகிறது.
18 வயது முதல் 60 வயது வரை 45 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான ஆண்நபர் அனைவரும் மூன்று மாதத்திற்கு ஓருமுறை இரத்ததானம் செய்யலாம். பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம். நமது உடலில் உள்ள 5 லிட்டர் இரத்தத்தில் தானத்தின் போது 350 மில்லி அளவே எடுக்கப்படும் . எனவே இரத்த தானம் செய்ய யாருமேதேவையற்ற பயம்கொள்ள தேவையேயில்லை.
நாம் ஒரு முறை அளிக்கும் இரத்தத்தில் மூவரின் உயிரை காக்கும் வாய்ப்புகள்உண்டு. நாம் தானம் செய்யும் இரத்தத்தில் இரத்த வெள்ளையணுக்கள் ,சிவப்பணுக்கள், தட்டணுக்கள் என மூன்றாக பிரித்தெடுக்கப்படுகிறது.அவற்றை மூன்று நோயாளிகளுக்கு அளிப்பதன் மூலம் மூன்று உயிர்களை காக்கமுடியும்.
ரத்த சிவப்பணுக்கள் 2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில்பதப்படுத்தினால் 35 நாட்கள் வரை கெடாமல் பாதுக்கலாம்.ரத்த தட்டணுக்கள் 22 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் 5 நாட்கள் பாதுகாக்கலாம்.ரத்த வெள்ளையணுக்கள் மைனஸ் 30 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் ஒரு ஆண்டு வரை பாதுகாக்கலாம். நம்மால் தானமாக அளிக்கப்படும் இரத்தங்கள் பல்வேறு கட்டபரிசோதனைகளுக்கு பிறகே நோயாளிகளுக்கு பாதுகாப்பாக செலுத்தப்படுகிறது.
நோய் விபத்து போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பல்வேறு மனிதர்களுக்கு நாள்தோறும் இரத்தம் தேவைப்படுகிறது. நாம் அனைவரும் இரத்ததானம் செய்தால் அதனை சேமித்து பல்வேறு உயிர்களை நாள்தோறும் காப்பாற்ற முடியும். இரத்த தானம் செய்வது என்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
உதிரம் கொடுப்போம்.. உயிர் காப்போம்!