செய்திகள்

‘தமிழகத்தின் முதல் விரோதி ஆளுநர் ஆர்.என்.ரவி’ வைகோ விமர்சனம்!

கல்கி டெஸ்க்

மீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க பயணம் மேற்கொண்டிருந்தார். அதை விமர்சிப்பதுபோல் நேற்று உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்துரையாடலில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘வெளிநாடுகளுக்குச் செல்வதால் மட்டும் முதலீகளை ஈர்க்க முடியாது. நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்’ என்று பேசி இருந்தார்.

ஆளுநரின் இந்த சர்ச்சை பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உதகையில் நடைபெற்ற பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை ஹரியானா மாநிலம் ஈர்த்து வருகிறது. நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. முதலீடுகளை ஈர்க்கத் திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழியாக இருக்கும். உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்’ என்று பேசியுள்ளார். சிங்கப்பூர், ஜப்பானுக்கு ஒன்பது நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுவிட்டுத் திரும்பி இருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தப் பயணத்தில் ஐ.பி நிறுவனம், டைசல் நிறுவனம், ஹோம்ரான் ஹெல்த்கேர் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் 3,233 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் சொல்லி இருக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணத்தை இழிவுப்படுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலகால விஷத்தைக் கக்கி இருக்கிறார். ஆளுநரின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாட்டின் முதல் விரோதியாக விளங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற வேண்டும். இல்லையேல் நாகாலாந்து மாநிலத்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும்” என வைகோ தமது அறிக்கை வாயிலாக ஆளுநரை விமர்சித்து இருக்கிறார்.

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

SCROLL FOR NEXT