ஆசியாவிலேயே முதல் பணக்காரராக இருந்த கௌதம் அதானியின் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை தனது அறிக்கையின் மூலமாக வெறும் 50 பில்லியன் டாலராகக் குறைத்தது Hindenburg Reasearch நிறுவனம். இதைத் தொடர்ந்து தனது அடுத்த டார்கெட் யார் என்பதற்கான ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
Hindenburg நிறுவனத்தின் அறிக்கையால் ஆட்டம் கண்டு போன அதானி குழுமத்தின் மீதான விசாரணையே இன்னும் முடியாத நிலையில், New Report Soon - Another Big One என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள் அந்நிறுவனத்தினர். இதனால் "அடுத்த எந்த பெரிய நிறுவனம் இவர்கள் கையில் சிக்கப் போகிறதோ" என பல முன்னணி நிறுவனங்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளார்கள். அதுவும் இவர்கள் இன்னொரு பெரிய நிறுவனம் என்று குறிப்பிட்டுள்ளதால், அது இந்திய நிறுவனமாகக் கூட இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு முறை ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஒரு நிறுவனம் சார்ந்த அறிவிப்பை வெளியிடும்போது, அந்த நிறுவனத்தின் நிதிநிலை மோசமாக பாதிக்கக்கூடும். நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளையும், தவறுகளையும் இவர்கள் கண்டுபிடித்து, அதன் மூலமாக கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகிறார்கள்.
2017 ஆம் ஆண்டு Nathan Anderson என்பவரால் Hindenburg Reasearch என்று தடையவியல் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது. இவர் கனக்டிகட் பல்கலைக் கழகத்தில் வணிகத்துறையில் பட்டம் பெற்றவர். அதன் பிறகு Factset என்ற நிறுவனத்தில் நிதித்துறை சார்ந்த பணிகளில் தனது பயணத்தை தொடங்கினார். தற்போது உலகையே மிரட்டும் இந்த நிறுவனத்தைத் தொடங்கி மக்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
இவர்கள் ஒரு நிறுவனம் சார்ந்த அனைத்து விஷயங் களையும் ஆராய்ந்து, அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி பங்குச்சந்தையை வீழ்த்துவார்கள். குறிப்பாக 'ஷார்ட் செல்லிங்' என்ற முறை மூலமாகவே இவர்கள் அதிகப்படியான வருவாய் ஈட்டுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
பங்குச்சந்தையில் குறைந்த நேரத்தில் அதிக லாபம் ஈட்டுவதற்கு பல வழிகள் இருந்தாலும் அதில் மிகவும் பிரபலமானது Short Position என்ற முறை. இதில் ஒரு நிறுவனத்தின் பங்கு குறை போகிறது என முதலீடு செய்தால், அவர்கள் பிட்டிங் செய்த இடத்திலிருந்து பங்குகள் குறைந்தால் முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்கும்.
உதாரணத்திற்கு அதானி குழுமம் பற்றி பல குற்றச்சாட்டுகளை அடுக்கி, ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டார்கள். ஆனால் முறைகேடாக செயல்படும் அந்த நிறுவனத்திலேயே முன்கூட்டியே ஷார்ட் செல்லிங் ஆப்ஷன் வைத்திருப்பதாக Hindenburg Reasearch நிறுவனம் வெளிப்படையாக தெரிவித்தது.
இதற்குப் பெயர்தான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்வார்கள். தவறு செய்பவர்களை போட்டும் கொடுத்தாச்சு, அதே சமயம் அதை வைத்து நமக்கு லாபமாக பணத்தையும் சம்பாதிச்சாச்சு.