செய்திகள்

சீனாவில் அவெஞ்சர்ஸ் என்ட்கேமை முறியடிக்குமா அவதார் தி வேய் ஆஃப் வாட்டர்?

கல்கி டெஸ்க்

நேற்று உலகமெங்கும் வெளியான அவதார் தி வேய் ஆஃப் வாட்டர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் சீனாவில் இரு நாட்களிலேயே நல்ல வசூலை குவித்து வருகிறது.

அவதார் அதுவரை சீனாவில் வெளியான அனைத்து ஹாலிவுட் மற்றும் பிறநாட்டுப் படங்களின் வசூலை முறியடித்தது. 2014 ட்ரான்ஸ்பார்மாஸ் , ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்டன் வெளியாகும்வரை அவதார் முதலிடத்தில் தொடர்ந்தது. பிறகு பல படங்கள் அவதார் வசூலைத் தாண்டின. சீன பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் திரைப்படங்களில் அவதார் தற்போது எட்டாவது இடத்தில் உள்ளது.

அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம், அவதார் தி வேய் ஆஃப் வாட்டர் சீனாவில் வெளியாகியுள்ளது. சீனாவின் பல பகுதிகள் இப்போதும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் இயங்குகின்றன. இதனால், அவதார் இரண்டாம் பாகத்தின் வசூல் பாதிக்கப்படும். எனினும் வியாழக்கிழமை ப்ரீமியர் காட்சிகள் மற்றும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிவரை அவதார் இரண்டாம் பாகம் சீனாவில் 15 மில்லியன் டாலர்களை கடந்து வசூலித்துள்ளது. இந்த வார இறுதியில் 119 முதல் 128 மில்லியன் டாலர்களை வசூலிக்க வாய்ப்புள்ளதாக கணித்துள்ளனர்.

Avathar part II

சீனாவின் பிரபலமான டிக்கெட் புக்கிங் ஆப் Maoyan அவதார் இரண்டாம் பாகம் 360 மில்லியன் டாலர்களை சீனாவில் வசூலிக்கும் என கணித்துள்ளது. இது அவதார் முதல் பாகத்தைவிட அதிகம். எனினும், சீனாவில் அதிகம் வசூலித்து, ஹாலிவுட் படங்களில் முதலிடத்தில் இருக்கும் அவெஞ்சர்ஸ் - என்ட் கேம் படத்தின் வசூலை முறியடிக்குமா என்பது சந்தேகமே.

சீனாவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்களில் முதலிடத்தில் அவெஞ்சர்ஸ் என்ட்கேம், இரண்டாமிடத்தில் தி பேட் ஆஃப் தி ப்யூரியஸ், மூன்றாவது இடத்தில் ப்யூரியஸ் 7, நான்காவது இடத்தில் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், ஐந்தாவது இடத்தில் அக்வாமேன், ஆறாவது இடத்தில் ட்ரான்ஸ்பார்மர்ஸ் - ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன், ஏழாவது இடத்தில் வெனம், எட்டாவது இடத்தில் அவதார், ஒன்பதாவது இடத்தில் ஜுராஸிக் பார்க் - பாலன் கிங்டம், பத்தாவது இடத்தில் ட்ரான்ஸ்பார்மர்ஸ் - தி லாஸ்ட் நைட் ஆகியவை உள்ளன. இதில் இரண்டாம் இடத்தில் உள்ள தி பேட் ஆஃப் பியூரியஸ்வரை அவதார் 2 பின்னுக்குத் தள்ளும் என்பதில் ஐயமில்லை. முதலிடத்தில் உள்ள அவெஞ்சர்ஸ் என்ட்கேமை முறியடிக்குமா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT