'மாஸ்டர்' பெரும் வெற்றியைத் தொடர்ந்து, தளபதி விஜய், லோகேஷுடன் கூட்டணி அமைக்கும் திரைப்படம்தான் 'தளபதி 67'. இப்படம் லோகேஷ் கனகராஜின் 5வது படமாகும்.
லாேகேஷின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'விக்ரம்' படம் மாபெரும் ப்ளாக் பஸ்டர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பும் பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அடுத்த படம் தளபதி விஜய்யுடன் என்றதும் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
விஜய்யின் வாரிசு படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனராஜ் நடிகர் விஜய் நடிப்பில் தளபதி 67 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் காஷ்மீர் செல்லவிருக்கின்றனர்.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் நிவின் பாலியும் இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோயம்புத்தூரில் வருமானவரி துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது வெறும் சினிமாதான். அதைபொழுதுபோக்கு அம்சமாகத்தான் பார்க்க வேண்டும். ரசிகர்கள் பொறுப்பை உணரவேண்டும். உயிரை விடும் அளவுக்கு எல்லாம் முக்கியத்துவம் தர தேவையில்லை.
வாரிசு பட வெளியீட்டுக்குத் தான் இவ்வளவு நாள் காத்திருந்தோம். தளபதி 67 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 10 நாட்களில் அப்டேட்டை எதிர்பார்க்கலாம். ரிலீஸ் தேதி எல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் விக்ரம் படம் துவங்குவதற்கு முன்பாகவே டீசர் வெளியானதைப்போல தளபதி 67 படத்தின் டீசரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்கான படப்பிடிப்புதான் தற்போது நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்கு இப்படத்தின் டீசர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.