செய்திகள்

தூர்வாரப்படுமா திருமணிமுத்தாறு? மக்கள் எதிர்பார்ப்பு!

சேலம் சுபா

வ்வொரு ஊருக்கும் அங்கு பாயும் நதிகளால் பெருமை உண்டு. அவ்வகையில் திருமணிமுத்தாறு சேலம் மாநகரின் அடையாளமாக விளங்குகிறது. சேர்வராயன் மலைத்தொடரில் உற்பத்தியாகி சேலம் நாமக்கல் மாவட்டங்கள் வழியாக ஓடி காவிரியில் கலக்கிறது இந்த ஆறு. திருமணிமுத்தாற்றின் நீர்  சேலம் கொண்டலாம்பட்டி, ஆத்துக்காடு, உத்தமசோழபுரம் வழியாக செல்கிறது. மேலும் சேலம் மாநகரில் சேலம் அஸ்தம்பட்டி மண்டலம் வழியாக சேலம் டவுன் பேருந்து நிலையம் குகை கொண்டலாம்பட்டி வழியாக சென்று ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர் வழியாக பரமத்தி வேலூருக்கு செல்கிறது.

சேலம் மாநகரின் மையப்பகுதியில் செல்லும் திருமணிமுத்தாற்றின் சீரமைப்பு திட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது அந்த திட்டம் அப்படியே முடங்கி கிடக்கிறது. மையப்பகுதி வழியாக செல்லும் திருமணிமுத்தாற்றில் கட்டிடக் கழிவுகள் முப்புதர்கள் மண்டி சாக்கடை கழிவுநீர் செல்கிறது. இந்த கழிவுகளை அகற்ற வேண்டும் என்றும் திருமணிமுத்தாறு மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் திருமணிமுத்தாற்றில் சாயப்பட்டறை கழிவுநீர் நுறை பொங்கி நீரை பெரிதும் மாசுபடுத்தி வருகிறது. இதனால் அந்த பகுதியில் விவசாய நிலங்கள் பாதிக்கப் படுவதாக விவசாயிகள் வேதனைப் புகார் தெரிவிக்கின்றனர். நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செய்து வருவதாகவும் கழிவு நீர் கலந்து மாசடைந்த நுரை பொங்கி வருவதால் அந்தத் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை கொள்கின்றனர்.

சேலத்தின் பெருமைமிக்க திருமணிமுத்தாற்றில் சாயக் கழிவு நீரை கலப்பதை தடுக்க மாசு கட்டுப்பாடு வாரியம் குழு அமைத்த கண்காணிக்க வேண்டும் அப்போதுதான் அதனை தடுக்க முடியும் எனவும் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாக செல்லும்போது கழிவுநீர் வெளியேற்றுவதையும் தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நதிகள் நம் வளத்தின் சாட்சி. அவற்றினை மாசு படுத்தாமல் பயன்பாட்டுக்கு கொண்டுவரச் செய்வதே நன்மை தரும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT