10000 Year Clock
10000 Year Clock 
அறிவியல் / தொழில்நுட்பம்

பத்தாயிரம் ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரம் பற்றி தெரியுமா? 

கிரி கணபதி

நாம் வாங்கும் ஒரு கடிகாரம் சராசரியாக எவ்வளவு ஆண்டு காலம் உழைக்கும் என நினைக்கிறீர்கள்? ஒரு 5 வருடம்? அதிகபட்சம் 10 வருடம்? ஆனால் பத்தாயிரம் ஆண்டுகள் ஓடக்கூடிய ஒரு கடிகாரத்தை Long Now என்ற நிறுவனம் கட்டமைத்து வருகிறது. 

இந்த உலகில் நாம் இன்னும் எத்தனை ஆண்டு காலம் உயிருடன் இருப்போம் என்பது தெரியவில்லை. ஆனால் புதிதாக வடிவமைக்கப்பட்டு வரும் ஒரு கடிகாரம் பத்தாயிரம் ஆண்டுகள் ஓடக்கூடிய திறனுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் சிறப்பு என்னவென்றால், இந்த கடிகாரத்தை உருவாக்குவதற்கான செலவுகளை அமேசான் நிறுவனம் ஏற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

கணினி அறிவியலாளர் டோனி ஹில்சின் கனவுதான் இந்த 10000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரம். இதை ஒரு மிகச் சிறந்த கலை படைப்பாகவும், மனிதர்களின் வரலாற்றை பறைசாற்றும் நினைவுச் சின்னமாகவும் உருவாக்கி வருகிறது அந்நிறுவனம். இந்த கடிகாரத்தை உருவாக்குவதற்கான எல்லா செலவுகளையும் அமேசான் நிறுவனம் ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, அதை வடிவமைப்பதற்காக டெக்சாஸ் மாகாண மலையிலேயே தனக்கு சொந்தமான இடத்தையும் வழங்கியுள்ளார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ். 

இந்த கடிகாரத்தை எப்படி உருவாக்குகிறார்கள் என்பது பற்றிய காணொளி ஒன்றையும் 2018 லேயே ஜெஃப் பெசாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது பார்ப்பதற்கே மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது.

இந்த கடிகாரம் சாதாரண கடிகாரங்களைப் போலல்லாமல், ஒரு ஆண்டுக்கு ஒரு முறையே அதன் நொடி முள் நகரும். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் ஒலி எழுப்பும். இதுவரை இந்த கடிகாரத்தை கட்டமைப்பதற்கு 350 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. 2018ல் தொடங்கிய இந்த கடிகாரத்திற்கான கட்டுமான பணிகள் இன்றளவும் முடியவில்லை. இது எப்போது நிறைவடையும் என்ற தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.

சுமார் 500 அடி உயரத்திற்கு கட்டப்படும் இந்த கடிகாரத்தை Clock Of The Long மற்றும் 10000 Year Clock என பல பெயர்களில் அழைக்கிறார்கள். ஆனால் பத்தாயிரம் ஆண்டுகள் வரை மனித நாகரீகம் இந்த பூமியில் இருக்குமா என்பதே சந்தேகமாகத்தான் உள்ளது. இருப்பினும் இத்தகைய ஆகச் சிறந்த படைப்புக்கு Hats off.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT