Metaverse விர்ச்சுவல் ரியாலிட்டி உலகில் 16 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பத்தின் அடுத்து கட்டமாக விசுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் தற்போது அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் இதை மையமாகக் கொண்டு இயங்கும் AR, VR தொழில்நுட்பங்கள் உலகில் பல மாற்றங்களை கொண்டு வரும் என வல்லுனர்கள் கணிக்கின்றனர். வீடியோ கேம், சினிமா, சோசியல் மீடியா என பல துறைகளில் விர்ச்சுவல் ரியாலிட்டி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
நாம் நிஜமாக வாழ்வது போலவே கற்பனையாக விச்சுவல் ரியாலிட்டி உலகில் நாம் செயல்பட முடியும். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி விஆர் ஹெட்சட்டைப் பயன்படுத்தி மெட்டாவர்ஸ் உலகில் களமிறங்கியுள்ளார். அந்த சிறுமியின் மெயிநிகர் வடிவ அவதார் மெட்டாவெர்ஸ் தளத்தில் உலாவும்போது, அதேபோல அவதார் வடிவத்தில் வந்த ஆண்கள் அந்தப் பெண் அவதார் உருவத்தை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசில் புகார் அளித்த சிறுமி, குற்றவாளிகளை கண்டுபிடித்து தகுந்த தண்டனை அளிக்குமாறு கோரிக்கை விடுத்ததன் பேரில், இங்கிலாந்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பாலியல் பலாத்காரம் விர்ச்சுவல் ரியாலிட்டி உலகில் நடந்ததால் அந்த பெண்ணுக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், மனரீதியாக நிஜத்தில் பலாத்காரத்திற்கு உள்ளாகும் பெண் அனுபவிக்கும் அனைத்தையும் அவர் அனுபவித்துள்ளார்.
அதனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணின் வலியை அந்த பெண் உணர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடிப்படையாக வைத்து தன்னை பலாத்காரம் செய்தவர்களை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
தொடக்கத்தில் இணையத்தில் ஏதோ ஒரு அவதார் உருவத்தில் வந்த குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிப்பது என குழப்பத்தில் இருந்த போலீசார், சைபர் கிரைம் உதவியுடன் அவதார் மூலமாக குற்றம் செய்தவர்களைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி பலாத்கார நிகழ்வு தொழில்நுட்ப உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.