அறிவியல் / தொழில்நுட்பம்

Ai தொழில்நுட்பத்தின் உதவியால் பக்கவாதத்திலிருந்து மீண்ட நபர்.

கிரி கணபதி

க்கவாதப் பிரச்சனையால் 10 ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருந்தவரின் வாழ்க்கையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. 

இந்த 21ம் நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சியானது அனைவரும் வியக்கத்தக்க வகையில் இருந்து வருகிறது. இதுவரை எந்த தொழில்நுட்பமும் அடையாத அசுர வளர்ச்சியை செயற்கை நுண்ணறிவு அடைய காத்திருக்கிறது என்பது வல்லுனர்களின் நம்பிக்கை. இதனால் மக்களுடைய வாழ்க்கை எளிதாக மாறிவிட்டது எனலாம். 

உலகிலுள்ள தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்துமே செயற்கை நுண்ணறிவில் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டனர். மனிதர்களால் செய்ய முடியாத பல விஷயங்களை கணப்பொழுதில் செய்துகாட்டி அசத்தி வருகிறது Ai தொழில்நுட்பம். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக முதுகு தண்டுவட பாதிப்பால் கால்கள் முடங்கிய நிலையில் இருந்த ஒருவரை, மீண்டும் நடக்க வைத்துள்ளது இந்தத் தொழில்நுட்பம். 

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் Gert Jan Oskam. இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த வாகன விபத்தில் முதுகுத் தண்டுவடம் பலமாக பாதிக்கப்பட்டு, இரண்டு கால்களும் செயலிழந்து விட்டது. இதனால் தன் வாழ்வில் மிகப்பெரிய துன்பத்துக்குள்ளான அவர், பலமுறை தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றுள்ளார். இப்படியாக இவரது வாழ்க்கை கடந்த 10 ஆண்டுகளாகவே வேதனையாகவே இருந்திருக்கிறது. அந்த சமயத்தில்தான் இவருக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் அமைந்துள்ள 'டிஜிட்டல் பிரிட்ஜ்' என்ற நிறுவனத்தைப் பற்றி தெரிந்துள்ளது. இந்த நிறுவனமானது பல ஆண்டுகளாக தண்டுவட செயல்பாட்டை மீட்டெடுக்கும் ஆராய்ச்சியில் ஈபட்டுவருகிறது. அதாவது ஒருவர் நடக்க வேண்டும் என நினைத்தால், அந்த சிக்னலானது மூளையிலிருந்து தண்டுவடம் வழியாகத்தான் கால் தசைகளுக்குச் செல்லும். 

முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த சிக்னல் மூளையிலிருந்து காலுக்கு செல்வது தடைபடுவதால், கால்கள் செயல்பாடின்றிக் கிடக்கும். இப்படி செயல்படாமல் இருக்கும் தண்டுவடத்தை, செயற்கை நுண்ணறிவு சிப்பைப் பயன்படுத்தி, மூளை அளிக்கும் உத்தரவுகளை அனைத்து பாகங்களுக்கும் கொண்டு சேர்ப்பதே டிஜிட்டல் பிரிட்ஜ் நிறுவனத்தின் நோக்கமாகும். 

இப்படிதான் Gert Jan Oskam-க்கு முதுகு தண்டுவடத்தை செயல்படுத்தும் செயற்கை நுண்ணறிவு சிப் மற்றும் சென்சார்களைப் பொருத்தி கணினியுடன் இணைத்தது டிஜிட்டல் பிரிட்ஜ் நிறுவனம். அந்த கணினியில் இவர் நடக்க வேண்டும் என கமெண்ட் செய்தால் அவரது கால்கள் தானாகவே நடக்கத் தொடங்கி விடுகிறது. இருப்பினும் தன்னிச்சையாக மூளையிலிருந்து அவர் நினைத்தவுடன் தானாகவே நடக்க அவரால் முடியவில்லை. 

இதனால், அடுத்த கட்டமாக அவரது மூளையிலேயே நேரடியாக செயற்கை நுண்ணறிவு சிப்பைப் பொருத்தி, அதை முதுகுத் தண்டுவடத்திற்கு நேரடியாக உத்தரவிடச் செய்தனர். இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றதால், தற்போது அவரே தானாக நடக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 10 ஆண்டுகள் கழித்து தன்னால் மீண்டும் நடக்க முடிந்ததை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறார்.

இவரைப்போல் தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இந்த செய்தியானது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT