இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள 121 மொழிகளை உள்ளடக்கி வரும் ஏஐ தொழில்நுட்பம்.
பல்வேறு நிலைகளை கொண்ட நிலப்பரப்புகளை உள்ளடக்கி, பறந்து விரிந்து காணப்படும் நாடுகளில் ஒன்று இந்தியா. மேலும் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இந்நாட்டில் 22 அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. அதே சமயம் மக்களின் பயன்பாட்டில் 121 மொழிகள் உள்ளதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. பல்வேறு வாழ்க்கை சூழல் கொண்ட மக்கள் வாழும் நாட்டில் டிஜிட்டல் கட்டமைப்பும் அதி தீவிர வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
இந்த நிலையில் கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மற்றும் இந்திய மொழி தொழில்நுட்ப கணக்கீட்டு அமைப்பு இணைந்து, உள்ளூர் மொழிகளை டிஜிட்டல்மயப்படுத்த முயற்சி எடுத்து வருகின்றன.
டிஜிட்டல் சேவை பெற விரும்பும் மக்கள் தங்கள் உள்ளூர் மொழிகளில் டிஜிட்டல் சேவையை எளிதில் பயன்படுத்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
இதற்கான முதல் முயற்சியாக கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மலைவாழ் பகுதி மக்களுடைய மொழிகளின் தரவுகள் அனைத்தும் ஏஐ தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ஏஐ தொழில்நுட்பத்தின் பாஷினி செயலி மற்ற மொழிகளியினுடைய தரவுகள், வாக்கியங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டு, சரி பார்த்து அவற்றை பயன்படுத்தும். இந்த புதிய மொழி பதிவு செய்யும் முயற்சியில் 121 அடையாளம் காணப்பட்ட மொழிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பாசினி செயலி வழியாக பதிவு செய்யப்பட உள்ளது. இது வருங்காலத்தின் மிகப்பெரிய தகவல் களஞ்சியமாக இருக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம் அரசும் பல்வேறு வழியில் பயனடையும். நாட்டின் பல்வேறு துறைகளும் வளர்ச்சி அடைய இந்த முயற்சி பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.