Mobile Checking 
அறிவியல் / தொழில்நுட்பம்

உங்கள் மொபைல் செயல்பாட்டில் பின்னடைவை சந்திக்கிறீர்களா? இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்..!

A.N.ராகுல்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், நமது மொபைல் சாதனங்கள் இன்றியமையாதவை. இருப்பினும், அவை தான் பெரும்பாலும் சைபர் திருடர்களுக்கு முக்கிய இலக்குகளாகவும் உள்ளன. இப்படி சைபர் திருடர்களால் நம் மொபைலுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நம் கவன குறைவும் ஒரு வகையில் காரணம். எப்படி? அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

மால்வேர் என்றால் என்ன?

‘தீங்களிக்கும் மென்பொருள்’ என்பதை தான் சுருக்கமாக மால்வேர் என்பார்கள். இது கணினிகள், நெட்வொர்க்குகள் மற்றும் மொபைல்களுக்கு தீங்கு விளைவிக்க அல்லது அதை பற்றிய தகவலை திருட வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருளாகும். இது வைரஸ்கள்(virus), புழுக்கள்(worms), ட்ரோஜான்கள்(Trojans), ransomware, spyware மற்றும் adware என்று பல வகைகளை உள்ளடக்கியது. மால்வேர்கள் பொதுவாக ஃபிஷிங் மின்னஞ்சல்கள்(phishing emails), அங்கீகரிக்கப் படாத இணையதளங்கள், நம்பத்தகாத ஆப் ஸ்டோரின் மூலம் நடக்கும் மென்பொருள் பதிவிறக்கங்கள் மற்றும் வைரஸ் பாதிக்கப்பட்ட USB டிரைவ்கள் மூலம் பரவுகின்றன.

மால்வேர் நுழைவதற்கான சில காரணங்கள்:

1. நம்பத்தகாத மூலங்களிலிருந்து பதிவிறக்கம் (Downloading Apps from Untrusted Sources):

அதிகாரப்பூர்வமற்ற ஆப் ஸ்டோர்கள் அல்லது இணையதளங்களில் இருந்து ஆப்களை பதிவிறக்குவது மிகவும் பொதுவான தவறுகளில் ஒன்றாகும். இந்த வகையான இணையதளங்களில் ‘கூகுள் ப்ளே அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர்’ போன்ற அதிகாரப்பூர்வ ஸ்டோர்கள் அமல் படுத்தியிருக்கும் கடுமையான பாதுகாப்பு வசதிகள் பெரும்பாலும் இதில் இருப்பதில்லை.

2. மென்பொருள் அப்டேட்களை புறக்கணித்தல் (Ignoring Software Updates):

மென்பொருள் அப்டேட்களை தவிர்ப்பது உங்கள் சாதனத்தைப் பாதிப்படையச் செய்யலாம். சைபர் குற்றவாளிகள் எளிதாக நுழைய முடியாத பாதுகாப்பு அம்சங்கள் பெரும்பாலும் அப்டேட்களில் அடங்கும். அதனால் உங்கள் மொபைலின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆப்ஸ்களை அப்டேட் செய்த நிலையில் வைத்திருப்பது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்.

3. சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வது (Clicking on Suspicious Links):

ஃபிஷிங் தாக்குதல்கள்(Phishing attacks) என்பது மால்வேர் பரப்புவதற்கான ஒரு பொதுவான வழியாகும். தேவையற்ற மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அல்லது சமூக ஊடகங்களில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்வது மால்வேர் பதிவிறக்கங்களுக்கு வழிவகுக்கும். அதனால் எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்வதற்கு முன் எப்போதும் எச்சரிக்கை அவசியம்.

4. அதிகப்படியான அனுமதிகளை வழங்குதல்:

பல ஆப்கள் அவற்றின் செயல்பாட்டிற்கு தேவையில்லாத அனுமதிகளைக் கோருகின்றன. இந்த அனுமதிகளை வழங்குவதன் மூலமும், உங்கள் சாதனத்தில் உள்ள முக்கியமான தகவல்களை மறைமுகமாக மால்வேரால் அணுக முடியும். அதனால் ஆப்ஸ் அனுமதிகளை எப்போதும் ஒரு தடவை மதிப்பாய்வு செய்து தேவையானதை மட்டும் அனுமதிக்கவும்.

5. பாதுகாப்பு இல்லாத பொது Wi-Fi ஐப் பயன்படுத்துதல்:

பொது வைஃபை நெட்வொர்க்குகள் பெரும்பாலும் பாதுகாப்பற்றதாக இருப்பதால், ஹேக்கர்களின் வேலையை எளிதாக்குகிறது. VPN (Virtual Private Network) இல்லாமல் பொது Wi-Fi ஐப் பயன்படுத்தினால், உங்கள் சாதனம் மால்வேரால் பாதிக்கப்படலாம். ஜாக்கிரதை!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

SCROLL FOR NEXT