அறிவியல் / தொழில்நுட்பம்

ஹோட்டலில்  ரூம் புக் பண்ண போறீங்களா? உஷார் மக்களே!

கிரி கணபதி

சைபர் செக்யூரிட்டி நிறுவனமான CloudSEK போலி வாடிக்கையாளர் சேவை எண்ணைப் பயன்படுத்தி,  இந்தியா முழுவதும் உள்ள ஹோட்டல்களை குறி வைக்கும் ஒரு மோசடியைக் கண்டுபிடித்துள்ளது. 

 நீங்கள் இணையத்தில் ஹோட்டல் அதிகமாக புக் செய்பவராக இருந்தால் அதில் நடக்கும் புதிய ஸ்கேம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். மோசடி செய்பவர்கள் இப்போது கூகுள் பயனர்களை தவறாக வழிநடத்த, போலி வாடிக்கையாளர் சேவை எண்களை வெளியிடுகின்றனர். இது தொடர்பான மோசடியை சைபர் செக்யூரிட்டி நிறுவனமான CloudSEK கண்டுபிடித்துள்ளது. இந்த மோசடியில் கூகுளில் உள்ள ஹோட்டல் பட்டியலை பயன்படுத்தி, பிறரை கவரும் வகையிலான போலி வாடிக்கையாளர் சேவை எண்களை அதில் உள்ளீடு செய்வது மூலமாக தந்திரமாக ஏமாற்றுகிறார்கள். 

இதற்காக மோசடி செய்பவர்கள் ஒரே மாதிரியாக பல ஹோட்டல் அரை புகைப்படங்களைப் பயன்படுத்தி, ஒவ்வொன்றிலும் வெவ்வேறு வாடிக்கையாளர் சேவை எண்களை கொடுத்து விடுகிறார்கள். குறிப்பாக ஹோட்டல் பட்டியல்களின் மதிப்பாய்வு பிரிவில் இந்த படங்களை போட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். 

 மேலும் இந்த மோசடி செய்பவர்கள் தொடர்ந்து புதிய கூகுள் கணக்குகளை உருவாக்கி, புதிய போன் எண்களைப் பயன்படுத்தி திருடுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மோசடிக்கு பின்னால் ஒரு நபர் இருக்கிறாரா அல்லது ஒரு குழுவாக சேர்ந்து இது செய்யப்படுகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

இந்த மோசடியால் பலர் பணத்தை இழப்பது மட்டுமல்லாமல், பல ஹோட்டல்களின் பிராண்ட் இமேஜ் இதனால் வெகுவாக பாதிக்கப்படுகிறது. ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட 19 போலி எண்களிலிருந்து வரும் அழைப்புகளில், 71% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்ரூகாலர் பதிவுகள் குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு எண்ணில் இருந்தும் சராசரியாக 126 அழைப்புகள் செய்யப்பட்டுள்ளன. 

ஒரு ஹோட்டலை முன்பதிவு செய்வதற்கு முன் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் எண்ணுடன், கூகுளில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய் கிராஸ் செக் செய்வது நல்லது. குறிப்பாக கூகுளில் கிடைக்கும் சேவை எண்ணை ட்ரூ காலர் செயலில் போட்டு பார்த்தால் அது மோசடி எண்ணா அல்லது உண்மையான எண்ணா என்பது தெரிந்துவிடும். இணையத்தில் ஒரே ஹோட்டல் பெயர்களில் வெவ்வேறு தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டு விளம்பரப்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என CloudSEK நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த மோசடி குறித்து காவல் துறையில் சைபர் கிரைம் பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த மோசடிக்கு யாரும் பலியாகாத வகையில் தங்கள் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஹோட்டல் நிர்வாகம் எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT