bike... 
அறிவியல் / தொழில்நுட்பம்

இருசக்கர வாகனம் வாங்கும் பிளான் இருக்கா? அவசரம் வேண்டாம்! கவனிக்க நிறைய இருக்கு!

A.N.ராகுல்

ரியான பைக்கைத் தேர்ந்தெடுப்பது ஒரு கடினமான பணியாகும். அதுவும் குறிப்பாக, புதிதாக வாங்குபவர்களுக்கு. ஏராளமான சாய்ஸ் இருப்பதால், உங்கள் தேவைகளுக்கும் வாழ்க்கை முறைக்கும் எந்த வகையான பைக் பொருத்தமானது என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். அதை எப்படிச் செய்யலாம் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

1. ஹைவே பைக்குகள்: 

ஹைவே பைக்குகள் தார் சாலைகளில் வேகம் மற்றும் செயல்திறனுடன் பயணிப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளன. அவை இலகுரக பிரேம்கள், அகலமான டயர்கள் மற்றும் ஷார்ப்பான ஹேண்டில்பார்களைக் கொண்டுள்ளன. இந்தப் பைக்குகள் நீண்ட தூர சவாரி, நெடுந்தூர பயணம் அல்லது சாலைப் பந்தயங்களில் கலந்துகொள்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். நீங்கள் வேகம் மற்றும் செயல்திறனுக்கு முதன்மை அளிப்பவராக இருந்தால், இந்த வகை பைக்தான் உங்களுக்குச் சரியான தேர்வாகும்.

2. மவுண்டன் பைக்குகள் (Adventure): 

மவுண்டன் பைக்குகள் ஆஃப் ரோடு சாகசங்களுக்காக உருவாக்கப்பட்டவை. கரடுமுரடான நிலப்பரப்புகளைக் கையாளுவதற்கு அவை உறுதியான பிரேம்கள், அகலமான குமிழ் டயர்கள் மற்றும் சாப்ட் சஸ்பென்ஷன் அமைப்புகளுடன் வருகின்றன. இந்த வகை பைக்குகள் காடுகள் மற்றும் மலைப்பகுதிகளை ஆராய விரும்பும் நபர்களுக்கு ஏற்றது. நீங்கள் வெளிப்புறச் சாகசங்களை ரசிக்க உங்களுக்கு பல்வேறு நிலப்பரப்புகளைக் கையாளக்கூடிய பைக் தேவைப்பட்டால், இந்த வகை சாகசப் பைக்குகள்தான் சிறந்த தேர்வாகும்.

3. சிட்டி பைக்குகள்

சிட்டி பைக்குகள், நகர்ப்புற சூழலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை வசதியான இருக்கைகள், நிமிர்ந்த கைப்பிடிகள் மற்றும் சுவகரியமான சஸ்பென்ஷன் உடன் விற்பனையில் உள்ளன. இந்த பைக்குகள் தினசரி பயணம் செய்வதற்கும், வேலை நிமித்தமான குறைந்த எரிபொருள் செலவில் நகரத்தை சுற்றிய பயணங்களுக்கும் ஏற்றது. சிட்டி ரைடிங்கிற்கு நம்பகமான மற்றும் வசதியான பைக் தேவைப்பட்டால், சிட்டி பைக்தான் உங்களுடைய சிறந்த தேர்வாகும்.

4. எலக்ட்ரிக் பைக்குகள்: 

நீங்கள் முதல் தடவை பைக் வாங்க போகிறீர்கள் என்றால், உங்கள் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் மின்சார மோட்டார் பைக்கை (இ பைக்) வாங்கலாம். அவை தினசரி பயணத்திற்கு ஏற்றவை, பாரம்பரிய மோட்டார் சைக்கிள்களைக் காட்டிலும் செலவு குறைந்தது மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. இ-மோட்டார் பைக்குகள் மென்மையான மற்றும் அமைதியான பயணத்தை வழங்குகின்றன, அவை நகர்ப்புற சூழலுக்கு ஏற்றதாக அமைகின்றன. இதன்மூலம் சுற்றுசூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் கார்பன் தடத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கமுடியும்.

புதிய ‘பைக்’ வாங்குபவர்களுக்கான கணக்கீடுகள் மற்றும் பரிசீலனைகள்

1. பட்ஜெட்: 

நீங்கள் எவ்வளவு செலவழிக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கவும். பைக்குகள் சிறு பட்ஜெட் முதல் உயர்தர மாடல்கள் வரை பல விலைகளில் வருகின்றன. ஆரம்பச் செலவை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அதற்குத் தேவைப்படும்  பராமரிப்பு மற்றும் வருங்காலங்களில் ஏற்படக்கூடிய செலவுகளையும் கருத்தில் கொள்ளுங்கள்.

2. நோக்கம்: 

நீங்கள் உபயோகிக்கப் போகும் பைக்கின் முதன்மை நோக்கத்தை முதலில் அடையாளம் காணவும். சிறிய அல்லது நெடுந்தூர பயணமா,  சாலைக்கு அப்பாற்பட்ட சாகசங்களுக்கு இதை வாங்குகிறீர்களா? என்று சிந்தித்து, நீங்கள் தேர்ந்தெடுக்க போகும் பைக் வகையை உங்கள் பயன்பாட்டிற்கேற்ப தேர்வு செய்யுங்கள்.

3. உங்களுக்கேற்ற வடிவமைப்பு: 

பைக் உங்களுக்கு சரியாக பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். மிகப் பெரிய அல்லது மிகச் சிறிய பைக் அசௌகரியம் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்தும். நீங்கள் தேர்ந்தெடுக்கும்  பைக்கின் அதிகபட்ச எடை சுமக்கும் திறன் மற்றும் உறுதித் தன்மையைப்  பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

4. அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்: 

உங்களுக்கு தேவைப்படும் முக்கியமான அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை(features and specifications) கவனியுங்கள். இதில் பிரேக்குகளின் வகை (டிஸ்க் அல்லது ரிம்), கியர் சிஸ்டம், சஸ்பென்ஷன், பிரேம் மெட்டீரியல் மற்றும் விளக்குகள், ரேக்குகள் மற்றும் ஃபெண்டர்கள் போன்ற விஷயங்கள் அடங்கும்.

5. டெஸ்ட் ரைடு: 

பைக்கை வாங்குவதற்கு முன் எப்போதும் சோதனை செய்யுங்கள். இது பைக்கின் வசதி, கையாளுதல் மற்றும் செயல்திறனுக்கான உணர்வைத் தரும். உங்கள் டெஸ்ட் ரைடுக்கு பைக் எவ்வாறு பதிலளிக்கிறது மற்றும் அது உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்கிறதா என்பதைக் கவனியுங்கள்.

6. பராமரிப்பு மற்றும் ஆயுள்: 

பைக்கின் பராமரிப்பு தேவைகள் மற்றும் ஆயுள் பற்றி யோசியுங்கள். சில பைக்குகளுக்கு மற்றவற்றைவிட பராமரிப்பு அடிக்கடி தேவைப்படும். உதிரி பாகங்கள் கிடைப்பது மற்றும் உங்கள் பைக்கை சர்வீஸ் செய்யக்கூடிய உள்ளூர் சர்வீஸ் சென்டரைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

7. மறுவிற்பனை மதிப்பு: 

பைக்கின் சாத்தியமான மறுவிற்பனை மதிப்பைக் கவனியுங்கள். சில பிராண்டுகள் மற்றும் மாடல்கள் மற்றவற்றைவிட அதனுடைய  மதிப்பை சிறப்பாக வைத்திருக்கின்றன. நீங்கள் எதிர்காலத்தில் மேம்படுத்த திட்டமிட்டால், நல்ல மறுவிற்பனை மதிப்பு கொண்ட பைக் புத்திசாலித்தனமான முதலீடாக இருக்கலாம்.

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT