Moon  
அறிவியல் / தொழில்நுட்பம்

நிலவின் மேற்பரப்பு துருவா? தாது பொருளா?

சுடர்லெட்சுமி மாரியப்பன்

பூமியின் துணைக்கோளான நிலவில் ஆய்வு செய்ய இந்தியா மட்டுமல்லாது முன்னணி உலக நாடுகளும் செயற்கைக்கோள்களை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 - ம் தேதி நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் 3 விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி, இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்தனர்.

இதிலிருந்து நிலவின் தென் துருவத்தைத் தொட்ட முதல் நாடு, நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இது மட்டுமல்லாது உலக நாடுகள் நிலவை ஆய்வு செய்வதற்கு ஒதுக்கிய நிதியை விட இந்தியா குறைந்த அளவிலான நிதியை ஒதுக்கி நிலவு குறித்த ஆராய்ச்சியில் தன்னுடைய வெற்றியை நிலை நிறுத்தியது.

இந்த ஆய்வின் மூலம், நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன், அலுமினியம், கால்சியம், சல்பர், இரும்பு, குரோமியம், சிலிக்கான், டைட்டானியம், மாங்கனீசு போன்ற தனிமங்களும், தாதுப்பொருட்களும் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், வானியல் புகைப்பட கலைஞர் தர்யா காவா மிர்ஷா என்பவர் நிலவை எடுத்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் பேசுப்பொருளானது. அதோடு நெட்டிசன்களை வியப்படைய செய்தது.  நிலவின் செயல்பாடுகளை 4 நாட்களாக தொடர்ந்து கண்காணித்து, பின்னர் இந்த புகைப்படத்தை அவர் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்க்கும்போது நிலவின் மேற்பரப்பில் துருப்பிடித்தது போன்று காட்சியளிக்கிறது. இந்த புகைப்படம் நெட்டிசன்கள் இடையே பெரும் விவாதத்தையே  ஏற்படுத்தியது.

ஒரு சிலர் இந்த புகைப்படத்தை பார்த்து இது உண்மையா? என்கின்றனர். இன்னும் சிலர் எடிட் செய்யப்பட்டதா? AI யா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதில் ஒரு சிலர் நிலவில் இருக்கும் இரும்பு மற்றும் பெல்ட்ஸ்பர் காரணமாக, இதுபோன்ற நிறத்தில் காட்சியளிப்பதாக விளக்கம் அளித்துள்ளனர். தற்போது, இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

உண்மையில் அது என்னவாக இருக்கும்? உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட் பண்ணிட்டு போங்க......

கணவன் மனைவி இந்த 7 விஷயங்களில் வெளிப்படையாக இருக்க வேண்டும்! 

ஆந்திரப் பிரதேசத்தின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய இனிப்பு ஆத்ரேயபுரம் பூதரெகுலு!

இந்த கண்ணாடி உங்களை தூங்க விடாது!

மஸ்குலர் டிஸ்டிராபியின் காரணமும் தீர்வும்!

நுரையீரலுக்கு நன்மை செய்யும் நொச்சி இலை பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT