Aurora in Ladakh 
அறிவியல் / தொழில்நுட்பம்

லடாக்கில் தென்பட்ட அரோரா ஒளிகள்! காரணம் என்ன?

பாரதி

அலாஸ்கா போன்ற இடங்களில் மட்டுமே அவ்வப்போது வானில் பல நிறங்கள் வித்தியாசமாகத் தோன்றி, டிஸ்னி படங்களில் இருப்பதுபோல தோன்ற வைக்கும். ஆனால், தற்போது அதே நிகழ்வு லடாக்கிலும் நிகழ்ந்துள்ளது. ஆம்! வானம் டார்க் சிவப்பு நிறத்தில் மாறி அழகாக ஜொலித்திருக்கிறது. இதனை அரோரா என்று அழைப்பார்கள்.

ஹன்லேயில் உள்ள இந்திய வானிலை ஆய்வகத்தின் பொறியியலாளர் டோர்ஜே ஆங்சுக் லடாக்கில் ஒரு அரிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது என்றும், அதனை சிவப்பு வில் என்றும் விவரித்துள்ளார். உலகெங்கிலும், ஐஸ்லாந்து, அலாஸ்கா, நார்வே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் அவ்வப்போது இந்த அரோரா தோன்றும். இதன் விளைவாக வானம் பச்சை, சிவப்பு, பர்ப்பில் போன்ற ஏராளமான நிறங்களில் மாறி அழகாகக் காட்சியளிக்கும்.

ஆனால் தற்போது, ஆச்சர்யமூட்டும் விதமாக வட அமெரிக்கா, இந்தியாவின் சில பகுதிகளிலும் இந்த அரோரா ஒளிகள் தோன்றியுள்ளது. இது பலரது கண்களையும் மனதையும் கவர்ந்தாலும், இதன் காரணத்தை அறிந்தீர்கள் என்றால் திடுக்கிட்டுப் போவீர்கள்.

அரோரா பொரியாலிஸ் எனப்படும் இந்த நிகழ்வு, சூரிய புயல் ஏற்படும்போதுதான் நிகழும். இது சூரியனின் மேற்பரப்பு செயல்பாட்டின் வேகம் அதிகரிப்பு காரணமாக ஏற்படுகிறது. இது சூரிய வெடிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் வானம் ஒளிர்கிறது. இது ஏற்படுவதால் மின் தடைகள் போன்ற பல விளைவுகளும் ஏற்படுகின்றன. மேலும் இது navigation systems பாதிப்பு மற்றும் நெட்வொர்க் பிளாக் அவுட்களை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

சூரிய எரிப்புகளில் அதிக சார்ஜ் துகள்கள் உள்ளன. பெரும்பாலும் இவை நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனைக் கொண்ட பூமியின் வளிமண்டலத்தில் உள்ள துகள்களைத் தாக்கும்போது, ​​ வானம் நீலம், இளஞ்சிவப்பு மற்றும் ஊதா ஆகிய நிறங்களில் தோன்றும்.

அரோரா பொரியாலிஸை ஏற்படுத்தும் சூரிய எரிப்புகள் வயர்லெஸ் தகவல் தொடர்பு மற்றும் சக்தி சீர்குலைப்பு, செல்லுலார் நெட்வொர்க் செயலிழப்பு, ரேடியோ சிக்னல்களின் இழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் ராணுவம் செயற்கைக்கோள் வழிசெலுத்துதல் அமைப்புகளை பாதிக்கிறது. வயர்லெஸ் நெட்வொர்க்குகளை ஆதரிக்கும் மின்சார கட்டடங்களை இந்த சூரிய எரிப்பு முக்கியமாக பாதிக்கிறது.

மேலும் CNN இன் அறிக்கையின்படி, 1989 இல், கனடாவின் கியூபெக்கில் ஏற்பட்ட இந்த சூரிய புயலால், ஒரு பெரிய மின்தடையை ஏற்படுத்தியது. இந்த முறை, சூரிய புயலின் தீவிரம் இந்தியா உட்பட, முன்பை விட அதிகமான பகுதிகளில் அரோரா பொரியாலிஸ் தோன்றுவதற்கு காரணமாகிறது. இந்தியாவில் ஹன்லே மற்றும் லடாக் பகுதிகளில் அரோரா பொரியாலிஸ் தென்பட்டுள்ளது. 

பேரழகில் இருக்கும் விபரீதத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றால், Aurora borealis தான். ஆனால், உலக மக்கள் இவை தரும் ஆபத்துக்களை கருத்தில் கொள்ளாமல், இதன் அழகைப் புகைப்படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT