Blockchain 
அறிவியல் / தொழில்நுட்பம்

Blockchain தொழில்நுட்பம் என்றால் என்ன?.. உலகமே மாறப்போகுது!

கிரி கணபதி

பிளாக்செயின் தொழில்நுட்பம் என்பது ஒரு பரவலாக்கப்பட்ட மற்றும் வெளிப்படையான டிஜிட்டல் சேமிப்பு முறையாகும். இது பரிவர்த்தனைகளை ஒரே சமயத்தில் பல கணினிகளில் பதிவு செய்கிறது. இது பாரம்பரிய centralized அமைப்புகளைப் போலல்லாமல், ஒரு தனி அமைப்பு மூலமாக பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்தி சரிபார்க்கிறது. இதன் மூலமாக ஒரே நேரத்தில் பல கணினிகளுடனான பரிவர்த்தனைகளை சரிபார்த்து பதிவு செய்ய முடியும். எனவே இந்த அணுகுமுறையில் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை இருப்பதால், சேமிப்பு முறையின் எதிர்காலமாக இது பார்க்கப்படுகிறது. 

பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் அம்சங்கள்: 

பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் மிக முக்கியமான அம்சங்களில் அதன் பரவலாக்கத் தன்மை அடங்குகிறது. இதனால் இடைத்தரகர்களின் உதவி இல்லாமலேயே பிளாக் செயின் நெட்வொர்க்கில் இணைக்கப்படும் நபர்களே அவர்களின் தரவுகளை சேமித்து பராமரிக்க முடியும். 

இதில் நடக்கும் பரிவர்த்தனை வரலாற்றைப் பார்க்க பிறரை அனுமதிப்பதன் மூலமாக, இதில் உள்ள வெளிப்படத் தன்மையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இதில் நடக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைகளும் பதிவு செய்யப்படுவதால், குறிப்பிட்ட தகவலை மாற்றி சேதப்படுத்துவது முற்றிலும் சாத்தியமற்றது. 

பிளாக் செயின் தொழில்நுட்பம் பரிவர்த்தனைகளைப் பாதுகாக்க மேம்பட்ட கிரிப்டோகிராபிக் நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு பரிவர்த்தனையும் என்க்கிரிப் செய்யப்பட்டு, முந்தைய பரிவர்த்தனையுடன் இணைந்து ஒரு தொகுதி சங்கிலியை உருவாக்குகிறது. இதனால் ஹாக்கர்கள் குறிப்பிட்ட தரவுகளைக் கண்டறிந்து கையாள்வது மிகவும் கடினம். 

பிளாக் செயினில் ஒரு பரிவதனை பதிவு செய்யப்பட்டால் அது நிரந்தரமாகிவிடும். யாராலும் அந்தத் தரவை மாற்றி அமைக்க முடியாது. 

பிளாக்செயின் எங்கெல்லாம் பயன்படுத்தலாம்: 

  • பிட்காயின் மற்றும் இத்திறியம் போன்ற கிரிப்டோ கரன்சிகள், பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் மிகவும் பிரபலமான பயன்பாடாகும். இதன் மூலமாக கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கும், டிஜிட்டல் நாணயங்களின் ஒருமைப்பாட்டை பராமரிக்கவும் பாதுகாப்பான தளத்தை இதன் மூலம் உருவாக்க முடியும். 

  • நிறுவனங்கள் அவர்களின் தயாரிப்புகளைக் கண்காணிக்கவும் கண்டுபிடிக்கவும் பிளாக் செயின் தொழில்நுட்பம் பெரிதும் உதவும். இதன் மூலமாக நிறுவனங்கள் அவர்களின் தயாரிப்புகளில் செய்யும் மோசடிகளைத் தடுக்கலாம்.

  • மருத்துவத்துறையில் நோயாளிகளின் தரவுகளைப் பாதுகாப்பாக சேமிப்பதற்கு இந்தத் தொழில்நுட்பம் சிறந்த மாற்றாக இருக்கும். இதன் மூலமாக நோயாளிகள் தங்களின் மருத்துவ வரலாறு குறித்த எல்லா விஷயங்களையும் சரியாக வைத்திருக்க முடியும். 

  •  தேர்தல்களை நடத்துவதற்கு பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான தளத்தை பிளாக் செயின் பயன்படுத்தி உருவாக்கலாம். இதன் மூலமாக ஒவ்வொரு வாக்குப்பதிவும் தனித் தனி பிளாக்கில் பதிவு செய்வதன் மூலம், வாக்குகளை மாற்றி அமைப்பது முற்றிலும் சாத்தியமற்றதாகிறது. 

இப்படி இந்தத் தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் என நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் பதிவின் மூலமாக பிளாக் செயின் பற்றிய மேலோட்டமான கருத்துக்களை மட்டுமே நான் தெரிவித்துள்ளேன். நீங்கள் ஒரு தொழில் முனைவராகவோ அல்லது டெவலப்பராகவோ ஆக ஆர்வமுள்ள நபராக இருந்தால், பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள இது பெரிதும் உதவி இருக்கும். இது நம் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் எதிர்காலத்தையே முற்றிலுமாக மாற்றிவிடும் வாய்ப்புள்ளதால், இதுகுறித்த அறிவு பெரும் உதவியாக இருக்கும். 

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT