Cat Eye Glasses டூடுல்
Cat Eye Glasses டூடுல் 
அறிவியல் / தொழில்நுட்பம்

Cat Eye Glasses டூடுல் வைத்த கூகுள். யார் அந்த ஆளுமை?

கிரி கணபதி

நேற்று கூகுளின் டூடுலை நீங்கள் கவனித்திருந்தால் முற்றிலும் வித்தியாசமாக பூனைக்கண் கண்ணாடி போன்று வடிவமைக்கப்பட்டிருந்ததை பார்த்திருக்கலாம். அது Cat Eye Glasses வடிவமைத்த 'அல்டினா ஷினாசியின்' 116 வது பிறந்த நாளுக்காக வைக்கப்பட்டதாகும். 

1970 ஆம் ஆண்டு, நியூயார்க் நகரில் பிறந்தவர்தான் 'அல்டினா ஷினாசி'. சிறுவயதிலிருந்தே இவருக்கு ஓவியத்தில் அதிக ஆர்வம் இருந்தது. புகழ்பெற்ற ஓவியக் கலைஞர்களான மோரிஸ் கான்டர் மற்றும் ஹான்ஸ் ஹாப்மேன் ஆகியோரின் வழிகாட்டுதல் பெயரில், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் அமெரிக்க கைவினைக் கழகத்தின் தங்கப்பதக்கம் வென்ற இவர், கலைப் பேராசிரியராக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். 

தொழிலதிபர், டிசைனர், ஓவியர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகத்தன்மை கொண்ட இவர், பெண்கள் விரும்பி அணியக்கூடிய பார்ப்பதற்கு பூனைக்கண் போலவே இருக்கும் கண்ணாடியை வடிவமைத்தார். இது தவிர பல ஆவணப்படங்கள், பல்வேறு கண்டுபிடிப்புகளையும் இவர் நிகழ்த்தியுள்ளார். மேலும் பாரிசில் ஓவியக்கலை பயின்று மீண்டும் அமெரிக்காவுக்கு வந்து நியூயார்க்கில் உள்ள பல கடைகளில் ஜன்னல் அலங்காரம் செய்து கொடுப்பவராக பணியாற்றி வந்தார். 

இந்த வேலையில் இருந்தபோதுதான் பெண்கள் எப்போதுமே வட்டமான வடிவில் மட்டுமே கண்ணாடி அணிந்திருப்பதை பார்த்த அவர், முற்றிலும் வித்தியாசமாக முதல்முறையாக கேட் ஐ வடிவ பிரேமை உருவாக்கினார். இவை ஹார்லிகுயின் ஃபிரேம்கள் என்றும் அழைக்கப்படுகிறது. 

இந்த கண்ணாடி தொடக்கத்தில் பிரபலம் அடையவில்லை என்றாலும், சில மாதங்கள் கழித்து மக்களிடையே Cat Eye கண்ணாடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு நியூயார்க் முழுவதும் பிரபலமடைந்து 1930 ஆம் ஆண்டின் பிற்பகுதிகளிலும், 1940 ஆம் ஆண்டுகளிலும், இந்தக் கண்ணாடிகள் அமெரிக்காவின் ஃபேஷன் உலகின் அடையாளமாகவே மாறியது. இன்றைக்கும் கூட பல பெண்கள் இதை விரும்பி அணிகிறார்கள். இந்தக் கண்ணாடிகள் பிரபலம் அடைந்ததையடுத்து 1939 ஆம் ஆண்டு அல்டினா ஷினாசிக்கு அமெரிக்க டிசைன் விருது கிடைத்தது. 

இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்த அவர், அவருக்கு ஓவியம் கற்றுக் கொடுத்த ஆசிரியரைப் பற்றி ஒரு ஆவணப்படத்தையும் தயாரித்து வெளியிட்டார். அந்த படம் வெனிஸ் திரைப்பட விழாவில் முதல் இடத்தைப் பெற்று, ஆஸ்கார் விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது!

நேற்றைய சராசரிகள் இன்றைய சக்கரவர்த்திகள்!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஆய்வுகள் கூறும் தகவல்கள்!

முக்தி துவாரகா! (பால்கா மந்திர்)

மனம் வறண்டு போகும்போது மழை நீரில் மீன் பிடித்தால்?

SCROLL FOR NEXT