சமீப காலமாகவே ChatGPT எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இந்த உலகை ஆண்டு வருகிறது. இதை பயன்படுத்தி மனிதர்கள் கண்டுபிடிக்கும் பல விஷயங்கள் நம்மை வியக்கச் செய்கிறது. இதில் ஒரு அங்கமாக ChatGPT இனி மனித உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உலகெங்கிலும் உள்ள பல முன்னணி டெக் நிறுவனங்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இத்தகைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே இருக்கும் பல தொழில்நுட்பங்களில் AI அம்சம் புதிதாக இணைக்கப்படுகிறது.
இது யூட்யூபில் தொடங்கி பல சமூக ஊடகங்களில், செயற்கை நுண்ணறிவு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல ஆன்லைன் சேவைகளை மனிதர்களுக்கு மிக நெருக்கமாக கொண்டு வரும் ChatGPT பற்றிய பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து வரும் நிலையில், ChatGPT-ஆல் மனித உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும் என்ற அம்சம் நம்மை பிரமிக்கச் செய்கிறது.
ஆசியாவில் உள்ள பல ஆராய்ச்சி மையங்கள், மைக்ரோசாஃப்ட் மற்றும் வில்லியமன் & மேரி இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த ஆய்வின் முதற்கட்டமாக மனித உணர்வுகளை LLM புரிந்து கொள்ளும் என்பது தெரிய வந்துள்ளது. இந்த LLM தான் கழிவுகளின் ஆதாரமாக இருந்து மனித உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு பதில் அளிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சில உணர்ச்சிகளை சார்ஜ் பிடி சிறப்பாக புரிந்து கொண்டு பதில் அளிப்பதாகவும், குறிப்பாக, ஒரு நபருக்கு இது மிகவும் முக்கியமானது, இது அவரது வாழ்க்கையில் முக்கிய தருணம் என்பதையெல்லாம் உணர்ந்து ChatGPT பதில் அளிக்கிறதாம். இந்த கண்டுபிடிப்பால் இதுவரை செயற்கை நுண்ணறிவாக இருந்த தொழில்நுட்பம், செயற்கை பொது நுண்ணறிவாக மாறும் என டெக் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதனால் வரும் நாட்களில் AI துறையில் மேலும் பல புரட்சிகரமான முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மைக்ரோசாப்ட் சிஇஓ சத்திய நாதெல்லா கூறியுள்ளார்.