Computer Virus.
Computer Virus. 
அறிவியல் / தொழில்நுட்பம்

Computer Virus: கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா? 

கிரி கணபதி

இன்றைய தொழில்நுட்ப உலகில், இன்டர்நெட்டின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. இதைப் பயன்படுத்தி யாருடைய ஸ்மார்ட்போன் அல்லது கணினியிலும் வைரஸ்களை எளிதாகப் பரப்ப முடியும். குறிப்பாக ஒருவரது சாதனத்தில் வைரஸ் இருக்கிறது என்பதே தெரியாமல் வைரஸ்களை பரப்பி, நூதன முறையில் கொள்ளை அடிக்க முடியும். 

கணினி பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிய காலத்தில், அனைவருமே ஆன்டிவைரஸ் பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது வரும் கணினிகளில், முன்கூட்டியே விண்டோஸ் டிஃபென்டர் இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பலரும் ஆன்டிவைரஸ் இன்ஸ்டால் செய்வதை மறந்துவிட்டனர். ஆனால் இன்றைய காலத்தில் எந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதோ அதே அளவுக்கு, மோசடிக்காரர்களும் புத்திசாலித்தனமாக மாறிவிட்டனர். 

கம்ப்யூட்டரில் வைரஸ்கள் இருப்பது தெரியாத அளவுக்கு புதுவிதமான வைரஸ்களை உருவாக்கி கணினிக்கு அனுப்பி விடுகின்றனர். அவற்றை நாம் அடையாளம் காண்பது கடினமானது. இருப்பினும் சில வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் கணினியில் வைரஸ்கள் இருக்கிறதா? இல்லையா? என நீங்களே கண்டுபிடிக்க முடியும். 

  1. உங்கள் கணினியில் வைரஸ் இருப்புகிறது என்பதற்கான முதல் அறிகுறி, ஏதேனும் ஒரு புதிய அக்கவுண்ட் தானாக சைன் இன் ஆகி, சைன் அவுட் ஆவது அல்லது பயன்படுத்திக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது கம்ப்யூட்டர் கிராஷ் அவரது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக ஒரு ஆன்டிவைரஸ் இன்ஸ்டால் செய்து முழுவதுமாக ஸ்கேன் செய்து பாருங்கள்.

  2. உங்கள் கம்ப்யூட்டரில் தானாக ஏதேனும் பாப் மெசேஜ்கள் வர தொடங்கினால், உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ்கள் இருக்கிறது என அர்த்தம். 

  3. நீங்கள் கோப்புகளை சேமித்து வைத்திருக்கும் ஃபோல்டரில், தேவையில்லாத புதிய ஃபோல்டர்கள் தானாக உருவாகி இருந்தாலோ அல்லது பைகளின் அளவில் மாற்றம் தெரிந்தாலோ, யாரோ ஒருவர் உங்கள் சாதனத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

  4. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஆன்டிவைரஸ் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திருந்தும், அதில் வைரஸ் இருக்கிறது என்ற எச்சரிக்கை வரவில்லை என்றால், ஏதேனும் புதிய சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து பாருங்கள். ஒருவேளை அந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யும்போது ஏதேனும் பிரச்சனை இருந்தால், உங்கள் கணினியில் வைரஸ்கள் இருக்க வாய்ப்புள்ளது. 

  5. நன்றாக இயங்கிக் கொண்டிருந்த கம்ப்யூட்டர் திடீரென வேகம் குறைவாக இயங்குகிறது என்றாலும், மால்வேர் அல்லது வைரஸ் உள்ளே நுழைந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

இத்தகைய அறிகுறிகள் மூலமாக உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் இருக்கிறது என்பதை நீங்களாகவே கண்டுபிடிக்க முடியும். எனவே உங்கள் சாதனத்தில் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக நல்ல ஆண்டி வைரஸ் பயன்படுத்தி ஸ்கேன் செய்யுங்கள். பின்னர் பாதிக்கப்பட்ட கோப்புகள் அனைத்தையும் உடனடியாக அழிப்பது நல்லது. உங்கள் சாதனத்தில் வைரஸ் நுழைவதற்கு நீங்கள்தான் ஏதேனும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருப்பீர்கள், எனவே அது என்னவென்று கண்டறிந்து உடனடியாக நீக்குங்கள். தேவையில்லாத புதிய சாப்ட்வேர்களை ஒருபோதும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யாதீர்கள். இன்டர்நெட் பயன்படுத்தும்போது பாதுகாப்புடன் இருங்கள். 

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள்! 

உலகின் ஒரே கொதிக்கும் நதி எது தெரியுமா?

வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படும் அதிசய சிவன் கோயில்!

SCROLL FOR NEXT