உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்த முக்கியமான புகைப்படங்கள் எதையாவது தவறுதலாக நீக்கி விட்டீர்களா? அதை எப்படி மீட்டெடுப்பது எனத் தெரியவில்லையா? கவலை வேண்டாம். இனி நீங்கள் டெலிட் செய்த புகைப்படங்களை கூகுள் போட்டோஸ் வாயிலாக மீட்டெடுக்க முடியும்.
இந்த முறையைப் பயன்படுத்தி சுமார் இரண்டு மாதத்திற்கு முன்னால் நீங்கள் டெலிட் செய்த புகைப்படங்களைக் கூட மீட்டெடுக்க முடியும். அதற்கு முதலில் உங்கள் google photos செயலியை திறக்கவும். குறிப்பாக நீங்கள் புகைப்படங்களை டெலிட் செய்வதற்கு முன்பே உங்கள் ஸ்மார்ட் போனில் google ஃபோட்டோஸ் இருந்திருக்க வேண்டும்.
google போட்டோஸ் செயலியின் உள்ளே சென்று, கீழ் வலது மூலையில் இருக்கும் Library என்பதை கிளிக் செய்து, Trash என்பதைத் தேர்வு செய்யவும். அதில் நீங்கள் டெலிட் செய்த புகைப்படங்கள் இருக்கும். அந்தப் புகைப்படங்களில் நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து, ரீஸ்டோர் என்பதை கிளிக் செய்தால், உங்களது புகைப்படம் மீட்டெடுக்கப்பட்டு லைப்ரரி பக்கத்தில் மீண்டும் தோன்றும்.
ஒருவேளை உங்களது Trash பக்கத்தில் புகைப்படங்கள் எதுவும் இல்லை என்றால், டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டெடுக்க முடியாது. நீங்கள் டெலிட் செய்த புகைப்படங்கள் 60 நாட்களுக்கு பிறகு trash பகுதியிலிருந்து தானாக அழிந்துவிடும்.
எனவே உங்களது ஸ்மார்ட் போனில் google ஃபோட்டோஸ் செயலியை இப்போதே நிறுவி Backup & Sync அம்சத்தை இப்போதே இயக்கினால், உங்கள் புகைப்படங்கள் google போட்டோஸில் தானாகவே நகல் எடுக்கப்படும்.
இதன் மூலமாக உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் புகைப்படங்கள் நீக்கப்பட்டாலும் google போட்டோஸில் இருந்து எளிதாக அவற்றை மீட்டெடுக்கலாம்.