Dream Sharing 
அறிவியல் / தொழில்நுட்பம்

உங்க ஸ்மார்ட்போனை இப்பவே தூக்கிப் போடுங்க… இனி கனவுகள் வழியாகவே தொடர்பு கொள்ளலாம்! 

கிரி கணபதி

கனவுகள் என்றாலே மர்மம், ரகசியம், கற்பனை உலகம் என்றுதான் நாம் நினைப்போம். ஆனால், இந்தக் கனவு உலகிற்குள் இப்போது விஞ்ஞானிகள் ஒரு புதிய கதவைத் திறந்துள்ளனர். இரண்டு பேர் தங்கள் தனித்தனி கனவுகளில் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ள முடியும் என்ற ஆச்சரியமான உண்மையை REMspace என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

இதுவரை கனவுகள் என்பது தனிப்பட்ட அனுபவமாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால், REMspace-ன் இந்த புதிய ஆய்வு, கனவுகளை ஒரு சமூக அனுபவமாக மாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. Inception என்ற ஆங்கிலத் திரைப்படத்தை உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள். அந்த திரைப்படத்தில்தான் பலருடைய கனவுகள் ஒன்றாக இணைக்கப்படும். திரைப்படத்தில் பார்த்த காட்சிகள் கற்பனையாகவே இருந்து வந்த நிலையில், தற்போது நிஜ உலகில் நாம் அதை அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

REMspace என்பது REM தூக்கம் சார்ந்த ஆய்வில் கவனம் செலுத்தும் ஒரு நிறுவனம். அதாவது REM தூக்கம் என்பது நாம் கனவு காணும் ஒரு நிலை. இந்த நிலையில் நமது மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும். REMspace நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இந்த தூக்க நிலையைப் பயன்படுத்தி, மனித மனதின் ஆழமான ரகசியங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். 

ஆய்வு எப்படி நடத்தப்பட்டது? 

இந்த ஆய்வில் இரண்டு பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த வீடுகளில் தூங்கி கொண்டிருக்கும்போது, அவர்களின் மூளை அலைகள் மற்றும் பிற தூக்கத் தரவுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சாதனம் மூலம் கண்காணிக்கப்பட்டன.‌ முதல் பங்கேற்பாளர் கனவு நிலையில் நுழைந்தபோது கணினி ஒரு சீரற்ற வார்த்தையை உருவாக்கி காதுகள் வழியாக அவருக்கு அனுப்பியது. 

இந்த வார்த்தை அவர் கனவு காணும் போது காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்யப்பட்டது. இரண்டாவது பங்கேற்பாளர் கனவில் நுழைந்தபோது முதல் பங்கேற்பாளருக்கு அனுப்பப்பட்ட அதே வார்த்தை இவருக்கும் அனுப்பப்பட்டது. இறுதியாக அவர்கள் விழித்ததும், அந்த வார்த்தை என்ன என்பதை இருவரும் நினைவில் வைத்திருந்தனர்.  ஒரு கனவுகளில் பரிமாறப்பட்ட வார்த்தையாக இது பதிவு செய்யப்பட்டது.‌ 

இந்த ஆய்வு மனித மனதின் ஆழமான ரகசியங்களைப் புரிந்து கொள்வதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இது, கனவுகள் என்பதை வெறும் கற்பனைகள் அல்ல, அவை நமது உணர்வுகளையும் நினைவுகளையும் பிரதிபலிக்கும் ஒரு சிக்கலான செயல்முறை என்பதை நிரூபிக்கிறது. மேலும் இந்த ஆய்வு மன நோய்கள் குறித்த ஆராய்ச்சியிலும் ஒரு புதிய பாதையைத் திறந்துள்ளது. 

REMspace இப்போது தங்கள் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தி, தெளிவான கனவுகளுக்குள் நிகழ்நேர தகவல்களை அடைய முயற்சி முயற்சிக்கிறது. விரைவில் நாம் நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கனவு வழியாக பேசும் காலம் வரலாம். 

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

இது தெரிஞ்சா இனி நீங்க பிரட் சாப்பிடவே மாட்டீங்க! 

SCROLL FOR NEXT