நாசாவின் ஹப்பிள் டெலஸ்கோப் மூலமாக படம் பிடிக்கப்பட்ட விண்மீனின் புகைப்படம் இணையத்தை பிரமிக்க வைத்துள்ளது.
சமீபத்தில் நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Evil Eye என்ற விண்மீனின் பிரமிக்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. இந்த விண்மீனின் நிஜப்பெயர் Constellation Coma Berenices. இதைப் பார்ப்பதற்கு பேயின் கண்ணைப் போல இருப்பதால் Evil Eye என அழைப்பார்கள். இது பூமியில் இருந்து சுமார் 17 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஒரு விண்மீனைச் சுற்றி அதிகப்படியான காஸ்மிக் துகள்கள் நிறைந்திருப்பதாலேயே இது பார்ப்பதற்கு பேயின் கண்ணைப் போல இருக்கிறது.
இது முதல் முறையாக 1799 விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டபோது நேர்மாறான இயக்கங்களைக் கொண்ட கேலக்ஸி என நினைத்தார்கள். அதாவது ஒரு நட்சத்திரத்தை சுற்றி வாயுக்கள் எதிர் எதிராக இயக்கத்தில் இருக்கும். அந்த வாயுக்களில் அதிகப்படியான காஸ்மிக் துகள்கள் நிறைந்திருப்பதால், முற்றிலும் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது என்றனர்.
இது முதல் முதலாக துல்லியமாக படம் பிடிக்கப்பட்டது 2008 இல் தான். நாசாவின் ஹப்பில் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது நாசாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு, இணையத்தை திக்குமுக்காடச் செய்துள்ளது. இந்த கேலக்ஸியின் வெளிச்சமான கருப்பகுதி, சுற்றியுள்ள தூசிகளை தன் பக்கமாக இழுப்பதால் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது. இதனாலேயே இந்த விண்மீனுக்கு Black Eye அல்லது Evil Eye என பெயர் வைத்தார்கள்.
உண்மையிலேயே இதை பார்ப்பதற்கு நமக்கு அச்சமாகதான் உள்ளது. ஒரு பேய் வானிலிருந்து நம்மை பார்ப்பது போல இருக்கிறது இந்த புகைப்படம். இன்னும் எத்தனை விசித்திரங்களை விண்வெளி தன்னுள் ஒளித்து வைத்துள்ளதோ தெரியவில்லை.