இந்த பிரபஞ்சம் பல விசித்திரமான விஷயங்களை உள்ளடக்கியது. மனிதர்களின் திறமை நினைத்துப் பார்க்காத அளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும், இந்த பிரபஞ்சத்தின் பல மர்மங்கள் இன்றளவிலும் தீர்க்கப்படாமலே உள்ளது. இத்தகைய மர்மங்களில் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் 16 Psyche என்ற சிறுகோளும் ஒன்று.
தற்போது செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே உள்ள இந்த சிறுகோளை தாக்குவதற்கான பணிகளை நாசா செய்து வருகிறது. எனவே இதன் மர்மங்களை பற்றி அறியும் வேளையில் நாசா ஈடுபட்டுள்ளது. இதில் அந்த சிறுகோள் பற்றிய பல சுவாரசிய உண்மைகள் வெளிவந்துள்ளன. அதாவது இந்த சிறு கோவிலில் 10000 குவாட்ரில்லியன் டாலர்கள் மதிப்பிலான தங்கம், நிக்கல், இரும்பு ஆகியவை உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு குவாட்ரில்லியன் என்பது ஒன்றுக்கு அருகே 15 பூஜ்ஜியங்கள் என அர்த்தம். இதன்படி 10000 குவாட்ரில்லியன் என்றால் அதன் மதிப்பை நாம் எப்படி சொல்வது. எத்தனையோ கோடி கோடி மதிப்பிலான இந்த சிறுபோல் பூமிக்கு வந்தால், இந்த பூமியில் உள்ள ஒவ்வொருவரும் கோடீஸ்வரர்தான் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதிலிருந்து கிடைக்கும் அதிகப்படியான தங்கம் மற்றும் இரும்பு போன்ற உலோகத்தால் பூமியில் அனைவரும் சொர்க்க வாழ்க்கை வாழலாம்.
இந்த சிறுகோள் உருளைக்கிழங்கு வடிவத்தில் உள்ளதாக நாசா கூறுகிறது. 226 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட இந்த சிறுகோள் மொத்தமும் இரும்பு மற்றும் தங்கத்தால் நிறைந்துள்ளது. இந்த சிறுகொள் குறித்த ஆய்வை நாசா தொடர்ந்து செய்து வருகிறது. இதற்கான ஆய்வு 2022-ல் தொடங்கப்பட்டதாகும். வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் இந்த சிறுகோளை நாசா அடைந்துவிடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.