கடந்த சில மாதங்களுக்கு முன்பு Grok என்கிற செயற்கை நுண்ணறிவு சாட் பாட்டை அமெரிக்காவில் உள்ள சில எக்ஸ் பயனர்கள் மட்டும் பயன்படுத்தும்படி அறிமுகம் செய்தார் எலான் மஸ்க். xAI எனப்படும் எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டு நிறுவனமே இந்த சாட் பாட்டை உருவாக்கி வெளியிட்டது. Chatgpt, Gemini போன்ற மற்ற செயற்கை நுண்ணறிவு சாட் பாட்களை விட இது சிறப்பாக செயல்படும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், இப்போது புதிதாக Gorq என்கிற ஏஐ சிப் நிறுவனம், எலான் மஸ்கின் Gork-ஐ ஒன்றுமில்லாமல் செய்யும் அளவுக்கு அதிக ஆற்றல்மிக்க சாட் பாட்டை வெளியிட்டுள்ளது.
ஒரே நொடியில் நூற்றுக்கணக்கான வார்த்தைகளை மிகத் துல்லியமாக உருவாக்கும் இந்த Gorq சாட் பாட்டின் டெமோ வீடியோ, அனைவரையும் ஆச்சரியத்தில் அழுத்தியுள்ளது. CNN தொலைக்காட்சியில் அதன் நிறுவனர் ரோஸ் கொடுத்த மற்றொரு டெமோவில், Gorq எந்த அளவுக்கு வேகமாகவும், துல்லியமாகவும் செயல்படுகிறது என்பது தெரிந்தது.
ஜெமினி மற்றும் பிற சாட் பாட்கள் சிறப்பாக செயல்பட்டாலும், Gorq அவை அனைத்தையும் விட மின்னல் வேகத்தில் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக நிஜ உலகில் நம்முடைய நடைமுறை பயன்பாட்டுக்கு போதுமான வேகத்தில் இது செயல்படும் என நம்பப்படுகிறது. அதாவது மனிதர்கள் எவ்வளவு வேகமாக பேசுகிறார்களோ அதைப் புரிந்து கொண்டு உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்யும் வேகத்தில், இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட சாட் பாட்கள் இருக்கவில்லை. இத்தகைய தாமதம் அவை ஒரு ரோபோ என்பதை பயனர்களுக்கு உணர வைக்கும்.
எலான் மஸ்கின் Gork சாட் பாட்டில் இருந்து கடைசி எழுத்தை மாற்றி Gorq என பெயர் தேர்வு செய்யப்பட்டதால், இது அதிக சலசலப்பை ஏற்படுத்தினாலும், அதன் செயல்பாடு மற்றும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் போன்றவை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, இதே போல வேகமாக இயங்கும் தொழில்நுட்பத்தை OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேனும் உருவாக்க கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்த Gorq செயற்கை நுண்ணறிவு Chatbot அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், இதன் அதிகரித்த ரெஸ்பான்ஸ் வேகத்தால், உலகத்தை வேறு மாதிரி மாற்றலாம் என அதன் நிறுவனர் ஜொனாதன் ரோஸ் நம்புகிறார்.