இமெயில் மூலமாக வாட்ஸ்அப் கணக்கை வெரிஃபிகேஷன் செய்யும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது தற்போது iOS பயனர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள நிலையில், விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
இதுவரை வாட்ஸ்அப் கணக்கை வெரிஃபிகேஷன் செய்யும் முறை மொபைல் நம்பரைப் பயன்படுத்தி மட்டுமே இருந்து வந்த நிலையில், நெட்வொர்க் கவரேஜ் இல்லாத பகுதிகளில் வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் செய்வது கடினமாக இருந்தது. இதை சரி செய்யும் நோக்கிலேயே இமெயில் வெரிஃபிகேஷன் முறையை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இதை செய்வதற்கு முதலில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு இமெயிலுடன் இணைக்கப்பட வேண்டும்.
உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக மாறிவரும் நிலையில் இந்தியாவில் இன்றளவும் மொபைல் நெட்வொர்க்கூட சரியாகக் கிடைக்காத பகுதிகள் உள்ளது. இப்படிப்பட்ட இடங்களில் இருப்பவர்கள் தங்களின் வாட்ஸ்அப் கணக்கை வெரிஃபை செய்யும் பின் நம்பரை நெட்வொர்க் கவரேஜ் வழியாக பெற முடியாது என்பதால், இமெயில் மூலம் வெரிஃபை செய்யும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. எனவே இனி இணையம் வழியாக வைஃபை அல்லது பிராட்பேண்ட் இணைப்பு பயன்படுத்தி இமெயில் வழியாக வாட்ஸ்அப் கணக்கை சரி பார்க்கலாம். இந்த அம்சம் தற்போது உலக அளவில் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தை பயன்படுத்த முதலில் வாட்ஸ்அப் கணக்கின் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும். அதன் பிறகு உங்களுடைய அக்கவுண்ட் விருப்பத்தை தேர்வு செய்து, இமெயில் அட்ரஸ் ஆப்ஷனுக்கு செல்லவும். பின்பு இமெயில் வழியாக உங்களுக்கான வெரிஃபிகேஷன் கோடை பெறுவதற்கான விருப்பத்தை இயக்க வேண்டும். அவ்வளவுதான் இதை செய்துவிட்டால் உங்களுக்கு ஈமெயில் அணுகல் கிடைத்துவிடும். இந்த அம்சம் உங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றால் சில வாரங்கள் காத்திருங்கள், எல்லா பயனர்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடப்படலாம்.
தற்போது இது iOS பயனர்களுக்கு முற்றிலுமாக வழங்கப்பட்டுவிட்டது. எனவே ஆண்ட்ராய்டு பயனர்கள் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்.